ARTICLE AD BOX

புகழ்பெற்ற கவிஞரும் பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவின் காரணமாக சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது காலமானார். அதாவது இதய அறுவை சிகிச்சைக்காக அவர் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமாக இருந்தவர் கவிஞர் நந்தலாலா. அவருடைய மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.