ARTICLE AD BOX
நேபாளத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு நேபாளத்தின் ஜித்பூர் சிமாரா பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் நேபாள காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களான கௌதம் குஷ்வாஹா (35), ரஞ்சன் குமார் சிங் (30), சஞ்சீவ் குமார் ராம் (40) ஆகிய மூவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மூவரையும் காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.