பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

4 hours ago
ARTICLE AD BOX

Playback Singer Kalpana Health News: தமிழ் திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி திரைப்படங்களில் பாடல்களுக்கு பின்னணி பாடியவர் கல்பனா. 

பிரபல பாடகையான கல்பனா ஹைதராபாத்தில் வசித்து வரும் நிலையில் அவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வீடு அவர் வசிக்கும் வீட்டின் கதவு இரண்டு மூன்று நாட்களாக திறக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. 

இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றாக் சேர்ந்து அவரை அழைக்க முயற்பட்டுள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை மற்றும் கதவையும் திறக்கவில்லை. 

எனவே அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் அளித்து, கல்பனாவை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர்களாலும் கல்பனாவை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இது சம்பந்தமாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக வந்த போலீசார் கல்பனாவை வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்தபோது அவர் வீட்டில் உள்ள கட்டில் மயங்கி சரிந்து கிடந்துள்ளார். அவரை உடனடியாக அங்கிருந்து மீட்ட போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

கல்பனாவின் கணவர் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளில் போலீசாரும் உறவினர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க - திருமணம் செய்யாமலே 2 குழந்தைகளுக்கு தாயான 23 வயது பிரபல நடிகை...உங்கள் ஃபேவரிட் கதாநாயகி?

மேலும் படிக்க - ஆஸ்கரில் பிரபல பாடகி செலினா கோமேஸ் காதலனுடன் மாஸ் என்ட்ரி–ரசிகர்களைக் கவர்ந்த ரொமான்ஸ்!

மேலும் படிக்க - அஜித்தை வைத்து படம் எடுக்கும் தனுஷ்! யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read Entire Article