பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்

18 hours ago
ARTICLE AD BOX
இப்படம் வரும் மார்ச் 21 வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸில் திரையிடப்படுகிறது

பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றிப் படமான 'டிராகன்' OTT வெளியீட்டு தேதி விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2025
03:33 pm

செய்தி முன்னோட்டம்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'டிராகன்' திரைப்படம் வசூலை அள்ளியது. இந்த நிலையில் இப்படம் வரும் மார்ச் 21 வெள்ளிக்கிழமை நெட்ஃபிலிக்ஸில் திரையிடப்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்த இந்தப் படம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

"சில டிராகன்கள் நெருப்பை சுவாசிப்பதில்லை, ஏனென்றால் அவற்றின் மறுபிரவேசங்கள் மிகவும் சூடாக இருக்கும். மார்ச் 21 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் நெட்ஃபிளிக்ஸில் டிராகனைப் பாருங்கள்" என்று ஸ்ட்ரீமிங் தளத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது.

கதைக்களம்

'டிராகன்' கதைக்களம் மற்றும் நடிகர்கள் விவரங்கள்

அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன், பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியானது.

கல்லூரியில் படிக்கும் போது கலகக்காரனாக மாறி, "டிராகன்" என்ற புனைப்பெயரைப் பெற்ற டி. ராகவனின் வாழ்க்கையை இந்தத் திரைப்படம் பின்தொடர்கிறது.

அவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழை போலியாக உருவாக்கி அதிக சம்பளம் தரும் ஐடி வேலைக்குச் செல்கிறான்.

பின்னர் அவரது பொய் வெளிவரவிருக்கும் நிலையில் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறான்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தனது படிப்பினை முடிக்க மீண்டும் கல்லூரிக்குச் செல்கிறான். அப்போது அவன் எதிர்கொள்ளும் மனமாற்றம் படத்தின் கதை.

நடிகர்கள்

'டிராகன்' படத்தின் குழு

கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், வி.ஜே.சித்து, மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியன் என ஒரு ஒரு நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

டிராகனுக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார், நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

எழுத்து மற்றும் நடிப்புக்காக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், அதன் வணிக வெற்றியில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

Read Entire Article