ARTICLE AD BOX

தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்று விட்டால் பிரதமர் மோடி பேசுவது நேரடியாக புரிந்து விடும் என்று திமுக பயப்படுவதால் இந்தியை எதிர்க்கிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக செயலாளர் இராம சீனிவாசன் கூறியுள்ளார்.
மணப்பாறையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய இராம சீனிவாசன் இவ்வாறு கூறியுள்ளார். ஆக, பிரதமர் மோடி பேசும் கூட்டத்தில் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னவர்கள் சரியாக மொழி பெயர்த்துச் சொல்லவில்லை என்றும் கூறுகிறாரா இராம சீனிவாசன்? எச்.ராஜா பிரதமர் மோடியின் பேச்சை மொழி பெயர்த்த போது சிறுநீர்ப் பாசனம் என்று மொழி பெயர்த்துப் பேசி பெரும் கேலிக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தி மொழி தங்கள் மொழியை அழித்து விடும் என்று தானே மகாராஷ்ரா பாஜக அரசு, மராத்திய மொழியிலேயே பேச வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அங்கே இந்தியை தாராளாமாக முதலில் அனுமதிக்கலாம் தானே என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
இதே இராம சீனிவாசன் தான் அசைவம் சாப்பிடும் இந்துக்கள் முட்டாள்கள் என்று கூறியதோடு, அசைவ ஓட்டலில் சென்று சாப்பிட்டு அது ஹலால் உணவா என்று விசாரித்தவர் ஆவார்.