காசி விஸ்வநாதர் கோயிலில் 3 நாள்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!

3 hours ago
ARTICLE AD BOX

உத்தரப் பிரதேசத்தின், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25 முதல் பிப். 27 வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிப். 26ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பல மாநிலகளிலிருந்தும் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிவ பக்தர்கள் குவிவார்கள் என்பதால் கோயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்துக்கள் கடைப்பிடிக்கும் முக்கிய விரதங்களில் மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் பண்டிகையாக மகா சிவராத்திரி விளங்குகிறது. சிவபெருமானுக்கென்று ஒதுக்கப்பட்ட ஓர் இரவாகும். அன்று நாள்முழுவதும் சிவ பக்தர்கள் சிவன் கோயிலில் ஒன்று கூடி இரவு முழுவதும் நடைபெறும் அபிஷேகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் வழக்கத்தைவிடச் சாதுக்கள், துறவிகள், நாக சாதுக்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கோயிலில் திரளுவார்கள். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் நாளை முதல் பிப்.25 முதல் பிப்.27 வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளைத் தலைமை நிர்வாக அதிகாரி உறுதி செய்து வருகிறார். பிப்ரவரி மாதத்தின் முதல் 17 நாள்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் கும்பமேளாவையடுத்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மகா சிவராத்திரியன்று மகா கும்பமேளா நிறைவடையக் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களில் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article