துபையில் கோலி ஆட்டத்தைக் கண்டு வியந்த நடிகை!

2 hours ago
ARTICLE AD BOX

சின்ன திரை நடிகை ஆல்யா மானசா துபையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தைக் கண்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியைக் காண தனது கணவருடன் துபை செல்லவுள்ளதாக முன்பே அறிவித்திருந்த ஆல்யா, அங்கு கோலி சதமடித்ததைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாகவும், முதல்முறையாக இந்தியா - பாகிஸ்தான் விளையாடுவதை நேரில் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சின்ன திரை நடிகை ஆல்யா மானசா தனது கணவர் சஞ்சீவ் உடன் அடிக்கடி பயணங்கள் செல்வதில் நாட்டமுடையவர். இவர் நடிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த இனியா தொடர், கடந்த நவம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது.

இத்தொடருக்கு பிறகு விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

2017ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஆல்யா. இத்தொடரில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து ராஜா ராணி பாகம் 2 மற்றும் இனியா தொடரில் நடித்துள்ளார். இவரின் கணவர் சஞ்சீவ் கார்த்திக், குளிர், 6 அத்தியாயங்கள், சகாக்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜா ராணி தொடரின் மூலமே மக்கள் மனம் கவர்ந்த நடிகரானார்.

இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காற்றின் மொழி, பிரியமான தோழி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக சமீபத்தில் துபை சென்றிருந்தனர்.

அங்கு கிரிக்கெட் போட்டியைக் கண்ட அனுபவத்தையும் விராட் கோலி சதமடித்ததையும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலர் நேற்று நடந்த ஆட்டம் குறித்து விடியோவில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | விஜய் சேதுபதி படத்தில் ரோஷினி ஹரிப்ரியன்!

Read Entire Article