ARTICLE AD BOX

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. bigg boss 8 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதனை முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் டைட்டிலை முத்துக்குமரன் வென்றார். இத்தனை நாட்களாக விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஸ்டார் விஜய் டிவியிலும், ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதற்கு முன்னதாக கூட பிக்பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் சேனல் டெலிகாஸ்ட் செய்திருக்கிறது. இப்போது அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இதனை பிப்ரவரி 23ம் தேதி முதல் இரவு 7 மணிக்கு பார்க்கலாம் என்று ப்ரோமோ வெளியாகியுள்ளது. சேனல் டிஆர்பி அதிகமாக்க இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.