ARTICLE AD BOX

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். இது கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படத்துடன் தனுஷ் தயாரித்து இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியானது. ஆனால் இந்தப் படத்தின் வசூலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு டிராகன் முந்திக் கொண்டது.
என்ன காரணம்?: அதுவும் யாரும் எதிர்பார்க்காத வசூல். என்ன காரணம் என்று பார்த்தால் இந்தப் படத்தின் திரைக்கதை அம்சமாகத்தான் உள்ளது. இளைஞர்கள், டீன் ஏஜ், கல்லூரி மாணவ, மாணவிகள் என இவர்கள் திரையரங்கிற்கு வந்தால்தான் வசூல் எகிறும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப படத்தைக் கொண்டு வந்துள்ளனர். படத்தில் வழக்கமான ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட் தான். நல்லவனா இருந்தால் அம்மாஞ்சின்னு சொல்றாங்க. ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றாங்க.
48 அரியர்ஸ்: அதே நேரம் ஊதாரித்தனமா பைக்கில் சுற்றினா அவன்தான் கெத்துன்னு பொண்ணுங்க லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க. அவங்களுக்கு நல்லா படிக்கணும்கறது மேட்டரே இல்லன்னு தப்பான கான்செப்டை புரிஞ்சிக்கிடற ஹீரோ காலேஜ்ல போய் 48 அரியர்ஸ் வைக்கிறாரு. இப்போ என்னாச்சுன்னா லவ் பிக்கப் ஆகுது. ஆனா வேலை கிடைக்கல.

கவரக் காரணம்: எத்தனை வருஷம்தான் அவளும் கூட இருப்பா. வேலை இவனுக்குக் கிடைக்காதுன்னு தெரியுது. லவ் பிரேக்கப் ஆகுது. உடனே நம்ம ஹீரோ என்ன செய்றாருங்கறதுதான் கதை. இது பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில எப்பவாவது நடந்த ஒரு கதையோடு ஒத்துப் போகுது. இதுதான் ரசிகர்களைக் கவரக் காரணம்.
இந்தப் படத்துல கடைசில நல்ல மெசேஜ் வச்சிருக்காங்க. யாரும் இப்படி ஊதாரித்தனமா சுத்தக்கூடாது. பொறுப்பா படிச்சி பெரிய ஆளாகி முன்னுக்கு வாங்கன்னுதான் சொல்றாங்க. அந்த வகையில் டிராகன் மனதைக் கவர்கிறான். இந்தப்படத்தின் வசூல் என்னன்னு பார்க்கலாமா...
வசூல் விவரம்: இந்திய அளவில் முதல்நாளில் 6.5கோடி, 2வது நாள் 10.8கோடி, 3வது நாள் 12.75கோடி, 4வது நாள் 5.50கோடி ஆக மொத்தம் 35.55கோடி. உலகளவில் இதன் வசூல் 56.35கோடி. இந்த ஆண்டின் டாப் ஓபனிங் டே வசூலில் விடாமுயற்சிக்குப் பிறகு 2வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நாளில் உலகளவில் விடாமுயற்சி 48கோடி வசூல். டிராகன் 11.2கோடி வசூல்.