ARTICLE AD BOX
GBU: கொஞ்சம் இறங்கி வந்தா.. கிங் ஆஃப் ஓபனிங் என்பதையே மறந்துடுவாங்க போல.. சம்பவம் செய்யும் அஜித்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குட் பேட் அக்லி. படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் படத்தின் பெயர் மற்றும் படத்தின் பெயருக்கு மட்டும் வெளியிடப்பட்டிருந்த போஸ்டர். படத்தின் போஸ்டர் வெளியாகி படத்தை உலகம் முழுவதும் டிரெண்ட் ஆக்கியது. இப்படியான நிலையில் படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் அஜித் குறித்த பேச்சுகளும் குட் பேட் அக்லி படம் குறித்த பேச்சுகளும் சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது.
அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை, மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை அசால்ட்டாக தயாரிக்கும் நிறுவனம் மைத்ரி மூவிஸ் நிறுவனம். புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்தது இவர்கள்தான். குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இசையில் தனது கெரியர் பெஸ்ட்டைக் கொடுக்க வேண்டும் என நினைப்பதாக கூறியுள்ளார்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த இந்தப் படம் ரசிகர்களை பெருமளவில் ஈர்க்கவில்லை. இதனால் வசூலில் தோல்வி படமாக மாறியுள்ளது. இது மட்டும் இல்லாமல், பல தியேட்டர்கள் படத்தை திரையிடுவதை நிறுத்திவிட்டார்கள். படம் இந்த அளவிற்கு படு தோல்வியைச் சந்திக்க காரணம், படத்தில் அஜித்திற்கு மாஸான காட்சிகள் இல்லாதது என கூறப்படுகிறது. படத்தில் தனக்கு மாஸான காட்சிகள் எதுவும் வைக்க கூடாது என அஜித் தான் முடிவெடுத்துள்ளார். இதுவே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டது. ஆனால், படம் குறிப்பிட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் படம் குறித்து பாராட்டி கருத்துகள் தெரிவித்தார்கள்.

விடாமுயற்சி: வணிக ரீதியாக படம் மாபெரும் தோல்வி படமாக மாறியதால், இணையவாசிகள் பலரும் அஜித் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்க தொடங்கிவிட்டனர். குறிப்பாக தனுஷ் ரசிகர்கள், அஜித்தை மோசமாக விமர்சித்தார்கள். அதாவது ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லி ரிலீஸ் செய்யப்படுகிறது என படக்குழு தெரிவித்தது. அதன் பின்னர் வெளியான விடாமுயற்சி பெரும் தோல்வி படமாக மாறியதால், குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என பேச்சுகள் அடிபட்டது.

குட் பேட் அக்லி: இதனால், ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படமும் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற பேச்சு அடிப்பட்டதும், தனுஷ் ரசிகர்கள் அஜித்தை கடுமையாக தாக்கினர். குறிப்பாக இட்லி கடை படத்துடன் குட் பேட் அக்லி ரிலீஸ் ஆனால், அஜித்தின் சினிமா வாழ்க்கை முழுவதுமாக முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறினார்கள். இப்படியான அவதூறு பேச்சுக்களை எல்லாம் கேட்டுக் கொண்டு, அமைதியாக இருந்த அஜித் ரசிகர்கள், இப்போது தனுஷ் ரசிகர்களையும் இணையவாசிகளையும் தாக்கு தாக்கு என்று தாக்கி வருகிறார்கள்.

ஓபனிங் கிங்: அதாவது குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை என படக்குழு மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், இணையமே குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து டிரெண்ட் ஆகி வந்தது. விடாமுயற்சி படம் படுதோல்வி அடைந்ததால் தனுஷ் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் பலரும், அஜித்தை விமர்சித்து வந்த நிலையில், சில தினங்களாக குட் பேட் அக்லி படம் குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இதைப் பார்த்த சினிமா வாசிகள், அஜித்தின் ஒரு படம் சரியாக போகவில்லை என அவரை ரொம்பவும் மட்டம் தட்டினார்கள், ஆனால் அவர் மீண்டும் கிங் ஆஃப் ஓபனிங் என்பதை நிரூபித்து விட்டார் என பேசிவருகிறார்கள்.
