ARTICLE AD BOX
நடிகை பிரியாமணி கவர்ச்சி காட்ட அதிக சம்பளம் கேட்டதாக இப்போது, டோலிவுட் திரையுலகில் ஒரு சர்ச்சை சுற்றி வரும் நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் விளக்கம் கொடுத்துளளார்.

சினிமாவில் நிலவி வரும் போட்டி காரணமாக கதாநாயகிகள் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. சாய் பல்லவி, நித்யா மேனன் போன்ற சில கதாநாயகிகள் மட்டுமே இன்னும் கவர்ச்சி பக்கம் சாயாமல் இருந்தாலும், தங்களுக்கென தனி முத்திரையை பதித்து விட்டனர்.
அதே போல் சில கதைக்கு கதாநாயகிகள், தேவைப்பட்டால் பிகினி காட்சி, மற்றும் காதலில் நெருக்கமான காட்சிகளுக்கு தயாராக இருப்பார்கள். இதன் முன்பு ஒரு கதாநாயகி பிகினி அணிந்தது பெரிய சர்ச்சையாக மாறியது. அந்த விஷயம் என்னவென்று பார்ப்போம்.

அவர் வேறு யாரும் இல்லை நடிகை பிரியாமணி தான். 2003ல் சினிமாவில் கதாநாயியாக தெலுங்கில் அறிமுகமான இவர், பின்னர் 2004-ல் கண்களால் கைது செய் படத்தில் நடித்தார். ஆரம்பத்தில் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் போராடிய பிரியாமணி பின்னர் அடுத்தடுத்த மொழிகளில் நடிக்க துவங்கினார்.

2007-ல் இவர் நடிப்பில் வெளியான பருத்தி வீரன் திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. தமிழில் தேசிய விருதை பெற்ற பின்னர், தெலுங்கில் பிரியாமணிக்கு ராஜமௌலி, என்டிஆர் யமதொங்க படத்தில் நடிக்கும் கோல்டன் வாய்ப்பு கிடைத்தது. இந்த மூவி சூப்பர் ஹிட் ஆனதால் டோலிவுட்டில் பிரியாமணி ஸ்டார் நடிகையாக மாறினார். தருணுடன் நடித்த நவ வசந்தம், கல்யாண் ராமுடன் நடித்த ஹரே ராம், போன்ற படங்கள் இவருக்கு டோலிவுட் திரையுலகில் வெற்றி படங்களாக,மாறியதோடு நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா போன்ற சீனியர் ஸ்டார் ஹீரோக்களுடனும் பிரியாமணி ஜோடி போட்டார்.

ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் எப்போதும் பிரியாமணி பிகினி அணியவில்லை. ஆனால் ஒரு ஹீரோவின் படத்தில் மட்டும் பிகினி அணிய பிரியாமணி ஒப்புக்கொண்டதால் அப்போது இது ஒரு பெரிய விவாதமாக மாறியது. நிதின் நடித்த த்ரோணா படத்தில் பிரியாமணி பிகினி அணிந்து போல்டாக கவர்ச்சி காட்டினார். ரிலீஸுக்கு முன்பு அவர் பிகினி ஸ்டில்ஸ் லீக் ஆனதால் பெரிய புயல் கிளம்பியது. இதனால் தயாரிப்பாளர்களுக்கும், பிரியாமணிக்கும் இடையே சண்டை நடந்தது என்றும் அவர் எக்ஸ்ட்ரா ரெம்யூனரேஷன் கேட்டார் என்றும் செய்திகள் வந்தன.

ஆனால் இந்த சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் டிஎஸ் ராவ் விளக்கம் அளித்தார். பிகினி விஷயத்தில் பிரியாமணி சண்டை போட்டது, அதிகம் சம்பளம் கேட்டது என்பது பொய் என்று கூறினார். அவர் மிகவும் நல்ல நடிகை, பிகினி காட்சிகளை ப்ரொஃபஷனலாக எடுத்துக் கொண்டார். ஆனால் இந்த படத்தில் பிகினி அணிய வேண்டும் என்று நாங்கள் அவரிடம் தாமதமாக சொன்னோம். கிட்டத்தட்ட 80 சதவீதம் ஷூட்டிங் முடிந்த பிறகு டைரக்டர் அவரிடம் பிகினி சாங் பிளான் செய்வதாக சொன்னார். கமர்ஷியலாக வொர்க் அவுட் ஆகும் என்று, சோலோ சாங் என்று சொன்னார்.

இதன் மூலம் பிரியாமணி 10 நிமிடம் டைம் கேட்டு கேரவனுக்குள் சென்றார். அவர்கள் அம்மாவுடன் பேசிவிட்டு வெளியே வந்து ஓகே சொன்னார் என்று தயாரிப்பாளர் டிஎஸ் ராவ் தெரிவித்தார். ரிலீஸுக்கு முன்பு அந்த போட்டோக்களை ஹைப் ஏற்றுவதற்காக நாங்களே ரிலீஸ் செய்தோம். பிரியாமணி பிகினியால் அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங்ஸ் வந்தது என்று தயாரிப்பாளர் டிஎஸ் ராவ் ஒப்புக்கொண்டார். அந்த படத்திற்கு மிக்ஸ்டு டாக் வந்தாலும் ஓப்பனிங்ஸுடன் சேஃப் ஆனேன் என்று கூறினார்.