பால் உற்பத்தியாளர்களுக்கான இழப்பீடு, நிதியுதவி உயர்வு -தமிழக அரசு உத்தரவு

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 2 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் அவர்களின் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி நிதி உதவிகள், அவர்களின் ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவியை உயர்த்தி தமிழ்நாடு அரசு திங்கள்கிழமை (10.03.2025) அரசாணை வெளியிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசானையில், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து மரணத்துக்கான இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் 2 குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisment
Advertisements

மேலும், பால் உற்பத்தியாளர்களின் ஒரு பெண் குழந்தைக்கு திருமண உதவித்தொகை ரூ.30,000-ல் இருந்து ரூ.60,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article