கரூர் | ஒருதலை காதல் விவகாரம் - கல்லூரி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை தேடும் போலீசார்

2 hours ago
ARTICLE AD BOX
Published on: 
10 Mar 2025, 6:44 pm

செய்தியாளர்: வி.பி.கண்ணன்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கரூரில் உள்ள அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் தனது தோழிகளுடன் பேருந்தில் வந்த மாணவி, கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, வேனில் வந்த நபர் ஒருவர் அந்த மாணவியை வலுகட்டாயமாக கடத்திச் சென்றுள்ளார்.

இதையடுத்து உடன் வந்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் மாணவியை கடத்திச் சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவியை கடத்திச் சென்றவர் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நந்தன் என்பதும் இவர், அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரியவந்தது.

மாணவியை கடத்திச் சென்ற இளைஞர்
பெரியகுளம் | பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விசிக நிர்வாகி கைது

இந்நிலையில் மாணவியின் செல்போன் அரவக்குறிச்சி அருகே ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கல்லூரி மாணவியை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article