ARTICLE AD BOX
அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வழக்கில் சிறையில் இருந்த ஞானசேகரனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஞானசேகரனிடம் 120 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நகை கொள்ளையில் ஞானசேகரன்
சென்னை பள்ளிக்கரணை சுற்றுவட்டார பகுதிகளில் சொகுசு வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் சிறையில் இருக்கும் ஞானசேகரனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாத்து வரும் பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் இதுவரை ஞானசேகரன் கொள்ளையடித்த தங்க நகைகளில் சுமார் 120 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனர். சொகுசு காரில் சென்று தனி நபராக திருடி வந்த ஞானசேகரன் 2022ம் ஆண்டு ஒரு வீட்டில் திருட வெளிமாநில கூட்டாலியுடன் சேர்ந்து கொள்ளையடிதுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் யாரும் இல்லாத, சிசிடிவி கேமரா இல்லாத பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க - ரூ.10,000 கோடி தந்தாலும்... கையெழுத்து போட மாட்டேன்... முதல்வர் ஸ்டாலின் அதிரடி
வழக்கமாக கொள்ளையடிக்க தனியாக செல்லும் ஞானசேகரன் வீட்டின் முன்பக்கம் செல்லாமல் எப்பொழுதும் பின்பக்கமாக பைப் மூலம் வீட்டின் மேல் ஏறி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கனாத்தூர், நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 16 குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்ததும், இதுபோன்று குற்ற சம்பவத்தில் மீண்டும் ஈடுபட மாட்டேன், திருந்தி வாழ போகிறேன் என கூறி பிரியாணி கடை வைத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருந்தி வாழ்வது போன்று பிரியாணி கடை வைத்துக் கொண்டு நள்ளிரவு காரில் வளம் வந்து ஆட்கள் இல்லாத பெரிய வீடுகளை நோட்டமிட்டு அதை தனி ஒரு ஆளாக கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
தற்பொழுது நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை முடிந்த பிறகு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போலீசார். மூன்று நாள் விசாரணையில் 120 சவரன் தங்க நகை, வெள்ளி பொருட்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய தார் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கொள்ளையடிக்க செல்லும்போது வீட்டில் செல்போன் ஆப் செய்துவிட்டு காரில் சென்று கொள்ளை சம்பவத்தை அறங்கேற்றிவிட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பிய பின்பு தான் செல்போனை ஆன் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க - முடிந்தால் அண்ணா சாலைக்கு வர சொல்லுங்க - அண்ணாமலைக்கு உதயநிதி சவால்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ