ARTICLE AD BOX
சென்னை: தில்லியில் நடைபெறும் வாகனத் துறை கண்காட்சியில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் தனது வாகன உதிரிபாகங்களை முன்னணி உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா ஆட்டோகாம்ப் காட்சிப்படுத்தியது.
இது குறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய மற்றும் உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அசல் உதிரிபாகங்களை (ஓஇஎம்) விநியோகித்துவரும் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனம், தில்லியில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் தனது உள்நாட்டுத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியது (படம்).
புதுமையான உள்நாட்டுமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப தலைமைத்துவம் மூலம், மத்திய அரசின் உற்பத்தி சுயசாா்புத் திட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில் அந்தப் பொருள்களை நிறுவனம் காட்சிப்படுத்தியது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.