ARTICLE AD BOX
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன் படி, நாட்டின் ஜிடிபி குறைந்துள்ளதால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு குறிப்பிடத்தக்க வரிச்சலுகை வழங்கப்படலாம். தற்போதுள்ள வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, புதிய Direct Tax Code (DTC) அறிமுகமாவது குறித்தும் தெரியவரும். சிக்கலான நேரடி வரிவிதிப்பை எளிமைப்படுத்தும் DTC உருவாகி வருவதால், வேறு பெரிய மாற்றங்கள் இருக்காது என சொல்லப்படுகிறது.
மேலும் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு புதிதாக 25% வரி விதிப்பு அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. தற்போது உள்ள புதிய வரி விதிப்பு நடைமுறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரி செலுத்துவோருக்கு எந்த வரியும் இல்லை. ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், அதிகபட்ச வரி அடுக்கான 30%-ன் கீழ் வருகிறார்கள்.
The post வருமான வரி…! 2025 பட்ஜெட்டில் வெளியாக போகும் சூப்பர் அறிவிப்பு…! என்ன தெரியுமா…? appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.