ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிலுமே தோல்வியை தழுவி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பல முன்னாள் வீரர்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது சேஷாத், பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்து விட்டார்கள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், "பாபர் அசாமின் நிலைமையை பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. அவரது கேரரின் தொடக்கத்தில் பல சாதனைகளை செய்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது என்ன நடக்கிறது என்று எல்லோரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு வீரர் இவ்வளவு காலம் தடுமாற மாட்டார்.
மேலும் படிங்க: இது நியாயமே இல்லை! இந்தியாவிற்கு எதிராக பாட் கம்மின்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஒரு அணியின் சிறந்த வீரரிடம் கேப்டன் பொறுப்பை கொடுப்பது மிகவும் தவறு. அவர் தனது நண்பர்களை சுற்றி வைத்து கொண்டார்.
அணியில் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், அவரது நண்பர்களையே தேர்ந்தெடுத்தார். அணியில் திறமையான வீரர்களை ஒதுக்கிவிட்டு உங்களுக்கு வேண்டியவர்களை வைத்து கொண்டால், ஒட்டுமொத்த கிரிக்கட்டுமே பாதிக்கப்படும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் எப்போதுமே அரசியல் தலையீடு இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி உங்கள் அணி வெற்றிபெறும். பாகிஸ்தான் அணியில் ஒழுங்கினம் தலை தூக்கி இருக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். அதை சரி செய்தலே வெற்றி நிச்சயம்" என தெரிவித்தார்.
மேலும் படிங்க: 36 வயதிலும் பிட்டாக இருக்க விராட் கோலி பின்பற்றும் 5 வழிமுறைகள் இது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ