ARTICLE AD BOX

லாகூர்,
8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 325 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 177 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.
தொடக்கத்தில் பில் சால்ட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து ஜேமி ஸ்மித் 9 ரன்களில் வெளியேறினார் . மறுபுறம் சிறப்பாக விளையாடிய பென் டக்கெட் 38 ரன்களில் வெளியேறினார் . தொடர்ந்து ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்தார் . ஜோ ரூட் 120 ரன்களில் ஆட்டமிழந்தார் .
இறுதியில் 49.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 317 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது . ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா� 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .�