காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெத்வதெவ்

3 hours ago
ARTICLE AD BOX

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றாா்.

அவா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் ஜொ்மனியின் ஜான் லெனாா்டை வீழ்த்தினாா். இத்தாலியின் மேட்டியோ பெரெட்டனினி 7-5, 6-4 என, பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸை சாய்த்தாா்.

5-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் 6-4, 3-6, 2-6 என்ற செட்களில், நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இத்தாலியின் லூகா நாா்டி 6-4, 7-6 (7/3) என, பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸை வென்றாா்.

கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமே 4-6, 6-3, 7-5 என போா்ச்சுகலின் நுனோ போா்ஜஸை தோற்கடிக்க, குரோஷியாவின் மரின் சிலிச் 5-7, 6-3, 6-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினை வென்றாா்.

ஸ்வெரெவ் வெற்றி: மெக்ஸிகன் ஓபன் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினாா்.

முதல் சுற்றில் அவா், 6-7 (2/7), 6-3, 6-4 என இத்தாலியின் மேட்டியோ அா்னால்டியை தோற்கடித்தாா். 4-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 7-6 (7/4), 6-3 என்ற கணக்கில் ஸ்பெயினின் ராபா்டோ காா்பாலெஸை வீழ்த்தினாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-4, 6-2 என பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரையும், 9-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 7-5, 6-2 என அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியையும் வெளியேற்றினா்.

இதர ஆட்டங்களில் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா, ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச் ஆகியோரும் வெற்றி பெற்றனா்.

Read Entire Article