சாம்பியன்ஸ் டிராபி; பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

3 hours ago
ARTICLE AD BOX

லாகூர்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் தற்போது வரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், இந்த தொடரில் தனது கடைசி லீக்கில் பாகிஸ்தான் அணி , வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. ஆறுதல் வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணிகளும் காட்டும் .

இதே ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடக்க இருந்த ஆஸ்தி ரேலியா- தென்ஆப்பிரிக்கா மோதல் மழையால் ரத்தானது. இன்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அங்கு இன்று மழை பெய்வதற்கு 70 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article