பாதங்களை பாதுகாக்க பார்லருக்கு போறீங்களா? எதுக்குங்க? பணத்தை சேமிக்கலாமே...

3 hours ago
ARTICLE AD BOX

உங்கள் கால்களை அழகுபடுத்த, அதிக செலவில்லாத, வினிகர் போதும். இது காலை மென்மையாக ஆக்கும். வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சிறந்த இயற்கையான எக்ஸ்ஃபோலியேட் ஏஜென்ட் ஆக கருதப்படுகிறது.

பெரும்பாலானவர்கள் கால்கள் பராமரிப்புக்காக பல மணி நேரம் செலவழிப்பார்கள். காலை ஷு அணிந்து மூடியே வைப்பதில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்பு பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து வினிகர்தான்.

பலர் மிகவும் விலையுயர்ந்த லோஷன்கள் வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால் வினிகரைக் கொண்டு காலை சுத்தம் செய்தால் மிக எளிதாக மென்மையான கால்களை பெறலாம். பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு இரண்டு பண்புகளையும் வினிகர் பெற்றுள்ளதால், கால்களில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி, பூஞ்சை உண்டாக்கக் கூடிய தொற்றுக்களை நீக்கி, மிருதுவான கால்களை பெறமுடியும். வினிகர் கொண்டு காலைக் கழுவி, சுத்தம் செய்வதால் கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டம் ஏற்படுவதுடன் ஆரோக்கியமாகவும் வைக்கிறது.

தொடர்ந்து நடப்பதாலும், பல மணி நேரங்கள் நிற்பதாலும், நமது கால்கள் சோர்வடைவதால் வெந்நீரில் வினிகரை சேர்த்து, அதில் சில நிமிடங்கள் கால்களை வைப்பதால், நல்ல பலன் கிடைக்கும். இதற்காக பல ஆயிரம் செலவழித்து ஸ்பாக்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
உங்கள் உதட்டின் அழகைக் கூட்ட 5 ஸ்க்ரப்கள்... வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!
Foot care

இதை எப்படிச் செய்ய வேண்டும்:

நீங்கள் வெள்ளை வினிகர் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் இரண்டுமே பயன்படுத்தலாம். பொதுவாக மணமில்லாத ஆப்பிள் சிடார் வினிகரையே எல்லாரும் பயன் படுத்துகின்றனர்.

ஒரு அகன்ற டப்பில் கால் பொறுக்கக் கூடிய சூடான தண்ணீரில் ஒரு கப் வினிகர் சேர்க்கவும்‌. அந்த டப் உங்கள் கால்களை வைக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.

இதோடு லாவண்டர் அல்லது பெப்பர்மிண்ட் ஆயிலும் சேர்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் எக்ஸ்ஃபோலியேஷன் இன்னும் அதிகமாகும். உங்கள் சோர்வையும் போக்கும்.

சுமார் 15 விருந்து 30 நிமிடங்கள் கால்களை வைக்கலாம்.

பிறகு மிருதுவான டவல் கொண்டு காலைத் துடைக்கவும்.

ஒரு நல்ல மாய்ச்சரைசரை காலில் தடவவும்.

இது போன்று வாரத்தில் ஒருமுறை அல்லது இருமுறை செய்யலாம்.

நீங்கள் வினிகரோடு அரை கப் பேக்கிங் சோடாவும் சேர்க்கலாம்.

ரோஸ்மேரி மற்றும் புதினா எண்ணெய் சேர்ப்பதும் மிக நல்லது.

இதையும் படியுங்கள்:
உங்க ஹேண்ட் பேக் ஐ சரியாக பராமரிக்கிறீர்களா?
Foot care

வினிகரில் காலை மூழ்கி சுத்தம் செய்த பின்னர், நீரேற்றத்துடன் இருக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஷியா வெண்ணையை தடவலாம்.

எச்சரிக்கை:

சிலருக்கு சென்சிடிவ் சருமமாக இருக்கும். ஆகவே காலை வினிகர் கலந்த நீரில் வைப்பதற்கு முன் டெஸ்ட் செய்யுங்கள். இதற்கு சிறிது வினிகரை நீரில் சேர்த்து உங்கள் கை மேல்பகுதியில் தடவி உங்கள் சருமத்துக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பயன்படுத்தவும்.

Read Entire Article