ARTICLE AD BOX
சென்னை,
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், வி.சி.க., பா.ம.க. உள்பட சுமார் 53 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க., நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 800-க்கும் மேற்பட்ட இருக்கைகளை கொண்டு மக்களவை வடிவமைத்தது பாஜக. இது நாடாளுமன்றத்தின் எந்தவொரு கூட்டத்திலும் எடுக்கப்படாத முடிவு. பாஜகவின் மறைமுக செயல்திட்டத்தின் அபாயகரமான முன்னகர்வு. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி தீர்மானம் என்பது பாஜகவின் வஞ்சக அரசியலுக்கு எதிரான உறுதியான முன்னகர்வு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.