பாஜக நிர்வாகியும், பிரபல ரௌடியுமான படப்பை குணா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

14 hours ago
ARTICLE AD BOX

பாஜக நிர்வாகியும், பிரபல ரௌடியுமான படப்பை குணா மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடியும், பாஜக ஓபிசி அணி மாவட்ட தலைவருமான படப்பை குணா மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது.

padappai guna bjp rowdy

படப்பை குணா மீதான 48 வழக்குகளில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். தன்னை காவல்துறையினர் கைது அல்லது எக்ன்கவுண்டர் செய்து விடுவார்கள் என தெரிந்துகொண்டு, படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தொடர்ந்து படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்குகளில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பை குணா வெளியில் இருந்து வந்தார். இந்நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் ரவுடி படப்பை குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ளார். இதனையடுத்து படப்பை குணாவும் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் படப்பை குணா மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கனவே 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள படப்பை குணா தற்போது 5வது முறையாக குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
English summary
Padappai Guna, a famous rowdy from Kanchipuram district and the district leader of the BJP OBC wing, has been arrested again by the police and the Goondas Act has been slapped on him.
Read Entire Article