ARTICLE AD BOX
Edappadi Palanisamy News: சேலம் மாவட்டம் ஆத்தூரில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா இன்று (மார்ச் 4) நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
Edappadi Palanisamy: கடலில் மீனவர்களுக்கு எல்லை தெரியாது - இபிஎஸ்
அப்போது அவரிடம் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்களே என கேள்வி எழுப்பியதற்கு, "இலங்கை கடற்படை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. நம்முடைய மீனவர்கள் நம்முடைய எல்லைக்குள் தான் மீன்பிடித்து தொழில் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு கடலில் எல்லை எது என தெரியாது. எல்லை கோடும் கிடையாது, அது கடல். நம்முடைய மீனவர்கள் ஒரு சிலர் தெரியாமல் எல்லைக்குள் சென்று விடுகிறார்கள், எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். கைது செய்யக்கூடாது.
மீனவர்களுக்கு எல்லை அளவு தெரியாது. அதனால் தான் இந்த பிரச்சனை வருகிறது. இந்திய அரசும் இலங்கை அரசும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அஞ்சு அடி, 10 அடி போனால் கூட உடனே கைது செய்யப்படுகிறார்கள். படகுகளை பறித்து சென்று விடுகிறார்கள். உடைமைகளை பறித்து செல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Edappadi Palanisamy: கச்சத்தீவை தாரைவார்த்தது யார்?
தொடர்ந்து இலங்கை கடற்படை மீனவர்கள் கைது செய்யப்படுவது துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள மாட்டோம். கச்சத்தீவை யார் தாரை வார்த்தது, கொடுத்ததற்கு யார் காரணம் ? என அனைவருக்கும் தெரியும். இதுபற்றி அவர்களிடம் கேள்வியை கேளுங்கள்.மீனவர்கள் பாதிப்பு உள்ளாவதற்கு யார் காரணம்? யார் தாரை வார்த்தார்கள்?. அதிமுக இரும்பினாலே விவாதம் நடக்கிறது. ஆனால் இது போன்ற பிரச்சனைக்கு விவாதம் நடப்பதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை வெளியிட வேண்டும்" என்றார்.
Edappadi Palanisamy: திமுகவால் எவ்வளவு அக்கிரமம் நடக்கிறது?
தொடர்ந்து பேசிய,"தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் ஆடியோவில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் வெளியில் வந்துள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவரை மிரட்டியுள்ளார், சட்டம் ஒழுங்கு காப்பாற்றக்கூடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரை மிரட்டி உள்ளார். சாதாரண அலுவலர்கள் எங்கு போய் நிற்கப் போகிறார்கள். இவற்றையெல்லாம் விவாத மேடையில் வையுங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும். எங்களை விவாதத்தில் வைத்து என்ன பிரயோஜனம். திமுகவால் எவ்வளவு அக்கிரமம் நடக்கிறது? இவையெல்லாம் வெளிவருவதில்லை" என்றார்.
Edappadi Palanisamy: பாஜக உடன் கூட்டணியா... இபிஎஸ் பதில்
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர உள்ளதாக கூறுகிறார்களே என கேட்டதற்கு,"எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்ல. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றுதான் எங்களது குறிக்கோள். ஓட்டுக்கள் சிதறாமல் ஒருங்கிணைந்து திமுகவை வீழ்த்துவது தான் அதிமுகவின் தலையாய கடமை. இது 2026 தேர்தலில் நடக்கும். யார் யார் அங்கு அங்கு இருக்கிறார்கள், இங்கே இருக்கிறார்கள் என ஆறு மாதத்திற்கு பிறகு தான் கூற முடியும். இன்னும் ஒரு வருடம் தேர்தலுக்கு இருக்கிறது" என பதிலளித்தார்.
Edappadi Palanisamy: தமிழக பட்ஜெட் குறித்து இபிஎஸ்
மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதே, ஏதும் கோரிக்கை வைக்கிறீர்களா என கேட்டதற்கு,"இந்த ஆட்சியில் என்ன செய்தார்கள்? நாங்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்து தானே வருகிறோம், சேலம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் எவ்வளவோ திட்டங்கள் கொண்டு வந்தோம், கொண்டு வந்த திட்டத்தையும் எடுத்துவிட்டார்கள். ஆத்தூரில் புறவழிச் சாலை கொண்டு வந்தோம் அதையும் எடுத்துவிட்டார்கள். வசிஷ்ட நதியில் கழிவுநீர் கலந்தது. சுத்தப்படுத்திவிட திட்டம் கொண்டு வந்தோம். இதையும் நிறுத்திவிட்டார்கள். இது போன்ற பல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். 234 தொகுதியிலும் அதிமுக ஆட்சியில் திட்டங்களை கொண்டு வந்தோம்" என்றார்.
Edappadi Palanisamy: 'அப்பா என அழைத்தால் குடும்பத்தில் பிரச்சனை வந்துரும்'
தமிழ்நாடு முதல்வரை அப்பா, அப்பா என கூறுகிறார்களே என கேட்டதற்கு," நீங்களும் அப்பா அப்பா என கூறுங்கள். அப்பா, அப்பா என கூறினால் குடும்பத்தில் பிரச்சனை வந்துவிடும். நாளை நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளும். தேவையான நிதி கொடுக்கவில்லை என்றால் அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், 39 தொகுதியில் ஜெயித்து என்ன பிரயோஜனம். நிதி வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும்" என்றார்.
உங்களது சுற்று பயணம் எப்போது தொடங்கப்பட உள்ளது? என கேட்டதற்கு,"தொடங்கும்போது தெரிவிக்கிறேன். பட்ஜெட் கூட்டம் அறிவித்தார்கள், மானிய கோரிக்கை நடக்கும் உரிய நேரத்தில் தெரிவிப்போம்.இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.
மேலும் படிக்க | பெண்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்த குட்நியூஸ்..! வாய்ப்பை மிஸ் பண்ணீராதீங்க
மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை: இம்மாதம் சீக்கிரம் வருகிறதா ரூ.1000...? இதுதான் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ