ARTICLE AD BOX
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக அமெரிக்கா மாறிவருவதாகவும், ஆனால் அது குறித்து விரிவாகக் கூற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், இம்முறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக தன்னுடன் வணிகத் தொடர்பில் உள்ள நாடுகளான கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை 25% அதிகரித்துள்ளார். இதேபோன்று சீனா பொருள்களுக்கு 10% முதல் 20% வரை வரியை உயர்த்தியுள்ளார். இது சர்வதேச சந்தையில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.