ARTICLE AD BOX
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தாவிட்டால் கல்விக்கான நிதியை மத்திய அரசு தரமாட்டார்களாம். இந்த விஷயத்தில் எல்கேஜி, யூகேஜி பசங்க சண்டை போடுவதுபோல் மத்திய – மாநில அரசுகள் நடந்து கொள்கின்றன. நிதியைக் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. வாங்க வேண்டியது மாநில அரசின் உரிமை.
ஆனால் இவர்கள் இருவரும், அதுதான் நமது பாசிசமும், பாயாசமும் பேசி வைத்துக் கொண்டு மாற்றி மாற்றி ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். What Bro.. It’s very Wrong Bro என்று திமுகவையும், மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் முக.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ், “பாசிசத்திற்கும், பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாத பாதரசம் ஒன்று இப்போது பேசி வருகிறது. பாதரசம் எதிலும் ஒட்டாதது. நஞ்சு கக்கக்கூடிய கொடிய திரவம் தான் இந்த பாதரசம். நன்றாக இருக்கும் நாட்டை உருக்குலைக்கின்ற பாதரசத்தை, பாசிசங்கள் தான் உருவாக்குகிறது. அந்த பாசிசங்கள் தான் பாதுகாப்பும் கொடுக்கிறது. அதை நீங்கள் அனைவரும் உணர வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.
Read More : ’பிறந்தநாளிலும் விட்டு வைக்கல’..!! மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து முதல்வரை சீண்டிய தமிழிசை சௌந்தரராஜன்..!!
The post ’பாசிசம்.. பாயாசமா’..? ’அப்படினா நீங்க என்ன பாதரசமா’..? விஜய்யை வெச்சி செய்த நடிகர் கருணாஸ்..!! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.