சாம்பியன்ஸ் டிராபி 2025: 7 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய அணி.. என்னனு தெரியுமா??

2 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி 2025: 7 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய அணி.. என்னனு தெரியுமா??

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் கடந்த பிப்ரவரி 19 ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 10 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய  மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது .  இதன் விளைவாக ஆஸ்திரேலியா அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்., சோதனையில் போலீஸ்.. பதற்றத்தில் டெல்லி.,

இந்த ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பவர் பிளேயில் (முதல் 10 ஓவர்களில்) 90 ரன்களை அடித்தது. இதுவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு அணி பவர் பிளேயில் எடுத்து அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னர் கடந்த 2017 சாம்பியன் டிராபி தொடரில்  இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 87 ரன்கள் அடித்திருந்தது. தற்போது இச்சாதனையை ஆஸ்திரேலியா அணி முறியடித்துள்ளது.

Follow us for more Latest Updates on Instagram

The post சாம்பியன்ஸ் டிராபி 2025: 7 ஆண்டு கால சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய அணி.. என்னனு தெரியுமா?? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article