ARTICLE AD BOX

பாக்கியா கேட்ட கேள்விக்கு கோபி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீடியோ காலில் பேச மயூ நீங்க வாங்கி கொடுத்த டிராயிங் புக்ல நான் படம் வரைந்து இருக்கேன் என்று காட்ட சூப்பரா இருக்கும் மயூ என்று சொல்லுகிறார் பாக்யா. இன்னும் நிறைய இருக்க ஆன்ட்டி நான் உங்களுக்கு அப்புறம் போட்டோஸ் அனுப்புறேன் என்று சொல்ல சரி என போனை வைக்கின்றனர்.
மறுபக்கம் ஈஸ்வரி கிச்சனின் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஹாலில் கோபி போன் பேசிவிட்டு கிச்சனுக்கு வருகிறார் என்னம்மா எதுவுமே பேசாம அமைதியா இருக்கீங்க என்று சொல்ல யார்கிட்ட பேசுறது இந்த வீட்ல யாருமே இல்ல நீயும் போன் பேசிக்கிட்டு இருக்க இனியா மேல படிக்கிறா என்று சொல்ல சரி வாங்கமா வாக்கிங் போகலாம் என்று கூப்பிடுகிறார் ஆனால் ஈஸ்வரி நான் வரல என்று சொல்லிவிடுகிறார் சரி கார்ல எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாம் நீங்களும் இனியும் வாங்க என கூப்பிட நீங்க வேணா போயிட்டு வாங்க நான் வரல எனக்கு மனசு சரியில்லை என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க, இந்த வீடு எப்படி இருந்தது ஆனா இப்போ எப்படி இருக்கு அவர் இருக்கும்போது ஏதாவது கதை சொல்லிக்கிட்டு இருப்பாரே சிரிச்சுகிட்டு காலம் போவோம் ஆனா இப்போ அவரே இருந்து கதை சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என வருத்தப்படுகிறார். அந்த நேரம் பார்த்து இனியா மேல இருந்து கீழே வந்து சேட் பண்ணிக் கொண்டே ஃப்ரிட்ஜில் இருந்து ஆப்பிளை எடுத்துக்கொண்டு சாட் பண்ணிக் கொண்டே போக கோபி நிறுத்தி என்னை இனியா நானும் பாட்டி உட்கார்ந்து கிட்டு இருக்கேன் என்கிட்ட பேசாம போறேன் என்று கேட்கிறார். ஒன்னும் இல்ல டாடி நான் ப்ராஜெக்ட் விஷயமா பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருக்கேன் என கோபியின் முகத்தை கூட பார்க்காமல் இனியா போனை பார்த்துக் கொண்டே பதில் சொல்ல முகத்தை பார்த்து பேசு இனியா என்று கேட்கிறார் உடனே நீங்க பேசிக்கிட்டு இருங்க டாடி எனக்கு வேலை இருக்கு என மேலே சென்று விட கோபி ஈஸ்வரியிடம் இப்பெல்லாம் இனியா கிட்ட ஒரு மாற்றம் தெரியுது யார்கிட்டயும் பேச மாட்டேங்குற எப்ப பாத்தாலும் போன்ல சாட் பண்ணிட்டு இருக்கா என்று சொல்ல அவளுக்கு இந்த வீட்ல பேசறதுக்கு யாரும் இல்லைன்னு நினைக்கிறா என்று ஈஸ்வரி சொல்லுகிறார்.
பிறகு பாக்யா மட்டும் ஏன் இப்படி இருக்கான்னு தெரியல செழியன் விஷயத்திலயோ எழில் விஷயத்திலோ அவ இந்த முடிவு எடுத்திருக்கக் கூடாது என்று சொல்ல அதற்கு கோபி அப்படி இல்லமா ரெண்டு பேருமே வளந்துட்டாங்க அவங்களுக்கு என்ன டிசிஷன் எடுக்கிற உரிமை வந்துருச்சு இதுக்கு மேல நம்ம எதுவும் சொல்ல முடியாது அவங்க ஃப்ரீயா இருக்கட்டும் ஏதாவது பண்டிகை டைம்ல ஒன்னா சேர்ந்து கொண்டாடிக்கலாம் என்று சொல்லுகிறார். எல்லா நேரமும் பாக்யாவை டிபன் பண்ணி அவங்க இருக்கக்கூடாது என்று சொன்ன ஈஸ்வரி ரெண்டு பேருமே திறமையான பசங்க தான் அவங்க ஏன் இப்படி இருக்க போறாங்க.
எனக்கு பாக்யாவை பத்தி தான் கவலை அவளை யார் பார்த்துப்பாங்க. 45ல ஓடுற மாதிரி 85 ல ஓட முடியாது. அவ என்னதான் அவளுக்கு தைரியம் சொல்லிக்கிட்டாலும் அவளுக்கு பாத்துக்க யாராவது வேணும் இப்போ என்ன நீயும் பாக்கியம் பாத்துக்குறிங்க ஆனால் அந்த வயசுல அவளை யார பார்த்துக்கிறது என்று சொல்ல உடனே கோபியோ அதே கேள்வி எனக்குள்ளேயே இருக்குமா இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு வயசு ஆகிடும் நானும் தனிமரமா தான் நிக்க போறேன் ஆனா பாக்கியாவுக்கு இருக்கிற தைரியமா திறமையும் எனக்கு இல்ல என்று பேசிவிட்டு சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்து உட்கார ஹாலில் கூப்பிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறார். பாக்கியா ஈஸ்வரி இடம் நம்ம சொந்தக்காரர் வராங்கன்னு சொன்னாங்களே எத்தனை மணிக்கு வராங்க நான் ரெஸ்டாரன்ட் கிளம்பனும் என்று கேட்க எப்படி அவங்ககிட்ட எப்போ வரிங்கன்னு கேட்க முடியும் அவங்க வந்த உடனே கிளம்பிடு என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியா உள்ள போறேன் என்று சொல்ல எதுக்கு என்று கேட்கிறார் சொந்தக்காரங்க எல்லாம் போர் பாட்டி என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல கேட்டாக்கா பதில் சொல்லு அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்க அவர்கள் வீட்டிற்கு வருகின்றனர் கோபி அவர்களை வரவேற்று உட்கார வைக்க செல்வி காபி கொடுக்கிறார். அவர்கள் வந்தவுடன் செழியன் எழில் எங்கே? இனியாவுக்கு கல்யாணம் எப்போ? கோபி பார்த்து நீங்க எவ்வளவு நாளா இங்கே இருக்கீங்க?என்ன கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அதற்கு கோபி எனக்கு ஒரு சின்ன சர்ஜரி நடந்தது அதனால இங்க இருக்கேன் என்று சொல்லுகிறார் உடனே வந்திருக்கும் இன்னொருவர் அவங்களுக்கு தான் டைவர்ஸ் ஆயிடுச்சு இல்ல உனக்கு தெரியாதா என்று கேட்க ஆமாமாம் தெரியும் சொன்னாங்க மறந்துட்டேன்னு சொல்லுகிறார் அப்போ இப்போ பாக்கியா சேர்ந்து வாழறாங்களா என்று கேட்க உடனே ஈஸ்வரி ஆமாம் என்று சொல்லிவிடுகிறார். இதனால் பாக்யா அதிர்ச்சியாக நிற்க பாக்யவே பேச விடாமல் அவர்களிடம் பத்திரிக்கை வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பி வைக்கிறார்.
அவர்கள் சென்ற பிறகு பாக்யா ஈஸ்வரி இடம் என்னத்த சொல்றீங்க அவங்க கிட்ட இப்படி பேசிகிட்டு இருக்கீங்க நாங்க எப்ப சேர்ந்து வாழலாம் சொன்னோம் என்று சொல்ல சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் அப்படித்தான் சொல்லணும் பாக்யா என பேசி மழுப்ப பார்க்க இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் என கோபியை திட்டுகிறார் நீங்க இந்த வீட்ல இருக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல ஆனால் நான் அமைதியா போய்க்கிட்டு இருக்கேன் இதெல்லாம் வரும்னு தெரிஞ்சு தான் நான் உங்களை அப்பே இங்க இருந்து போக சொன்னேன் என்று சொல்லிவிட்டு பாக்கியா சென்று விடுகிறார்.
கோபி என்ன முடிவெடுக்கப் போகிறார்? அதற்கு ஈஸ்வரி என்ன பதில் சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

The post பாக்கியா கேட்ட கேள்வி, கோபி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.