பாகிஸ்தானை கண்டு பயந்து நடுங்கிய கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

2 days ago
ARTICLE AD BOX

Virat Kohli's Stats vs Pakistan in ICC Champions Trophy : பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 124 ரன்கள் எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

Virat Kohli's Stats vs Pakistan in ICC Champions Trophy : மினி உலகக் கோப்பை என்று சொல்லக் கூடிய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு செல்லும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

பாகிஸ்தான் தோற்றல் தொடரிலிருந்து வெளியேறும். இதற்கு முன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 முறை மோதியுள்ளன. இதில், 3 முறை பாகிஸ்தானும், 2 முறை இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன. தற்போது 6ஆவது முறையாக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் ஒரு அரைசதம் உள்பட 124 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான பெரிய ஸ்கோர் எதுவும் கோலி அடிக்கவில்லை. இதே பார்ம் இன்றைய போட்டியிலும் தொடர்ந்தால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கோலி 3 சதங்கள், 2 அரைசதங்கள் உள்பட 678 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 148 பந்துகளில் 183 ரன்கள் எடுத்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

இதே போன்று தான் ரோகித் சர்மாவும், பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பெரிய ஸ்கோர் எதுவும் இல்லை. 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உள்பட மொத்தமாக 109 ரன்கள் எடுத்திருக்கிறார். இதே நிலை இன்றைய போட்டியில் தொடர்ந்தால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். தற்போது துபாயில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான 5ஆவது போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் மோசமான ஸ்டேட்ஸ்!

இதில், அதிகபட்சமாக சவுத் சகீல் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் 46 ரன்கள் எடுக்க, குஷ்தில் ஷா 38 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா, அக்‌ஷர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article