ARTICLE AD BOX
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று (பிப்ரவரி 26) மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
`பிறப்பால் ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது'
இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணரும் ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர், த.வெ.க தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவ்விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தின் முகமான நம் தலைவருக்கு வணக்கம். பிறப்பால் ஒரு தலைவன் உருவாக்கப்படக்கூடாது.

மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்கிற உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தப்போது பல்வேறு அழைப்புகள் வந்தது. உங்கள் கொள்கைகளை தமிழக வெற்றி கழகத்தில் இருந்து தொடங்குங்கள் என்று தலைவர் விஜய் சொன்னார். நான் ஏன் தவெக-வில் சேர்ந்தேன் என்றால், சிறு வயதில் புரட்சியாளர் அம்பேத்கரிடமும், தந்தை பெரியாரிடமும் இணைக்கப்பட்டவன் நான்.
அந்தக் கொள்கை வழியில் பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்த அனுபவம் இருக்கிறது. ஆனால் என்னுடைய ஒரே கேள்வி தந்தை பெரியாரின் சமூக சீர்த்திருத்தத்தைப் பேசக்கூடிய 70 வருட அரசியல் எப்போதும் புரட்சியாளர் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது கிடையாது. இரு பெரும் தலைவர்கள் அது ஆண், பெண் என்ற பாகுப்பாடு இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் எந்த ஆளுமையை தமிழகத்தின் தன்னுடைய தியாகத்தை செய்தவர்களை கொள்கைத் தலைவர்களாக நியமிததுள்ளார். தன்னுடைய சினிமா என்கிற உச்சபட்ச பொருள் ஈட்டக்கூடிய ஒரு பொறுப்பையும் துறந்து இந்தக் கொள்கை வழியில் நடக்க வேண்டும்,
ஒரு புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவருடன் பேசும்போதுதான் அவர் எந்த அளவிற்கு கொள்கை ரீதியில் உள்வாங்கி இருக்கிறார் என்கிற ஒரு புரிதல் எனக்கு இருந்தது. அதனை ஏற்று தவெகவில் இணைத்துக் கொண்டேன்...” என்றார்.
(More updates to come..!)
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
