தமிழ் சொல்வளம் என்னும் கட்டுரையில் இடம்பெற்றது..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

3 hours ago
ARTICLE AD BOX

இலைகள்…

அரசு, வேம்பு, கருவை, வாழை போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுமே *இலை* என்று பெயர் .

 

அகத்தி, பசலி, வல்லாரை, முருங்கை போன்றவைகளின் இலைகள் இலைகள் எனப்படாமல் *கீரை* ஆகின்றது.

 

மண்ணிலே படர்ந்து கிளைத்து வளரும் கொடிவகை இலைகளுக்குப் *பூண்டு* என்று பெயராகிறது.

 

கோரை, அறுகு வகைத் தாவரங்களின் இலைகள் *புல்* என பெயர் பெறுகின்றன.

 

மலைகளில் உயர்ந்து விளைகின்ற உசிலை போன்ற இலைகளுக்குப் பெயர் *தழை* எனப்படுகிறது.

 

வரகு, நெல், முதலியவற்றின் அகலமற்ற உயரம்குறைந்த பயிர்களின் நீண்ட நெடிய இலைகள் *தாள்* என வழங்கப்படுகிறது.

 

தாழை, சப்பாத்தி, கள்ளி, போன்ற வறண்ட நிலத்தாவர இனங்களின் இலைகளுக்குப் பெயர் *மடல்* எனப்படுகிறது.

 

நாணல், கரும்பு ஆகியவற்றின் இலைகள் *தோகை* என்று தமிழ் கூறுகின்றது.

 

தென்னை, கமுகு, பனை முதலிய நெடிதாய் வளர்ந்து உயர்ந்த மரங்களின் இலைகள் *ஓலை* என்றே சொல்லப்படுகின்றன.

Read Entire Article