ARTICLE AD BOX
மதுரையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு, சிறப்பாக இருப்பதாக பேட்டி
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்வதற்காக இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார. பின்னர் மதுரை சர்க்யூட் ஹவுஸில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், மதுரையில் தேசிய சேவை என்பது மக்கள் தேர்தலில் வாக்களிப்பது. 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் என்றும் வாக்களர்களுடன் இருக்கும் என்றார்.
மதுரையில் வாக்காளர்கள் பட்டியல் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தேன். அனைத்து சிறப்பாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார். தொகுதி மறுவரையரை குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார். இதனை தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரத்திற்கு கிளம்பி சென்றார்