பழைய இருசக்கர வாகனங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

4 days ago
ARTICLE AD BOX

தற்போது அனைவர் வீடுகளிலும் உறுப்பினராக இருந்து வரும் ஒன்றுதான் இருசக்கர வாகனம். அத்தியாவசிய ஒன்றாக மாறி வரும் இந்த வாகனங்களை அனைவராலும் புதிதாக வாங்க முடியாது. அவசரத்திற்கு உதவும் என்று கூடுதலாக பழைய வாகனம் ஒன்றை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்பவர்களும் உண்டு. அப்படி பழைய வாகனம் வாங்குபவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்...

1) வண்டியின் வயதை அறிவது:

வாங்க விரும்பும் வண்டி எந்த வருடம் ஆர்டிஓ வில் (RTO) பதிவு செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வண்டியினுடைய வயதை அறிந்து கொள்ளலாம். வாகனத்தின் தற்போதைய உரிமையாளர்தான் உங்களிடம் வண்டியை விற்கிறாரா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பெயர் மாற்றம் செய்யப்படாமலே பல கைகள் மாறிய வண்டியாக இருந்தால் பலவித சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

2) மைலேஜ்:

வண்டி எத்தனை கிலோமீட்டர் சாலையில் ஓடி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மீட்டரில் பார்க்கவும். ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டருக்கு மேல் ஓடாத வண்டியாக இருந்தால் மிகவும் நல்லது. மொத்த ஓட்டத்தைக் காட்டும் கருவியை முற்றிலும் நம்பி விட வேண்டாம். டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்களைக் கூட மாற்றி அமைத்து வண்டி ஓட்டத்தை குறைவாக காட்டும் திறமைசாலிகள் உண்டு.

3) வண்டியின் கண்டிஷன்:

அழகு, ஆடம்பரமான லுக்கிற்கு முக்கியத்துவம் தர வேண்டாம். வெளி பார்வைக்கு சேதமாகாமல் இருக்கிறதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். . அனுபவம் மிக்க ஒரு மெக்கானிக்கின் உதவி கொண்டு எஞ்சின், பேட்டரி, பேரிங், இரு பக்க டயர்கள், சீட் உறைகள் ஆகியவற்றை கவனித்த பின் வாங்குவது நல்லது. கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தராமல், செலவு அதிகம் வைக்காத வண்டியை வாங்குவது சிறந்தது.

இதையும் படியுங்கள்:
தயிர் சாதத்தை ஏன் கடைசியில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
Bike shop

4) இன்ஷூரன்ஸ் மற்றும் பெயர் மாற்றம்:

இன்ஷூரன்ஸ் இல்லாத வண்டியை வாங்க வேண்டாம். இன்சூரன்ஸ் இருந்து காலாவதி ஆகியிருந்தால் விற்பவர் மூலமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே திருப்தியாக இருந்தால் ஆர்டிஓ (RTO) வில் நம் பெயருக்கு மாற்ற சில படிவங்கள் வாங்கி நம் விவரங்களை அதில் எழுதி மாற்றிக் கொள்ளலாம். பெயர் மாற்றம் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள் யாராயிருந்தாலும் பெயர் மாற்றம் செய்து விடுவது நல்லது. இல்லையெனில் எதிர்பாராத பிரச்சனைகளில் சிக்க வேண்டி வரும்.

5) ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்கள்:

சில வண்டிகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் மற்றும் சர்வீஸ் எளிதாக கிடைப்பதில்லை. அத்துடன் செலவும் அதிகம். எனவே ஸ்பேர் பார்ட்ஸ் எளிதாக கிடைப்பதுடன் சர்வீஸ் சென்டர்களும் அதிகமாக இருக்கும் வண்டிகளை வாங்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
இயற்கையாக நுரையீரலை சுத்தப்படுத்த உதவும் 6 அற்புத மூலிகைகள்!
Bike shop

6) அறிமுகமான நபர்களிடமிருந்து வாங்குவது சிறந்தது:

கூடியவரை நமக்கு நன்கு அறிமுகமான, தனிப்பட்டவர்களின் வண்டிகளை வாங்குவதுதான் நல்லது. ஊர் விட்டு ஊர் சென்று வண்டி வாங்குவது வேண்டாம். சிலர் அவசர விற்பனை என்று ஆசை காட்டுவார்கள். அம்மாதிரி விளம்பரங்களில் விழுந்து விட வேண்டாம். 'ஊரை விட்டு செல்வதால் விற்பதாக' கூறும் நபர்களிடமிருந்தும் வாகனங்களை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது. காரணம் பின்னாளில் ஏதேனும் தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்வது கடினம்.

Read Entire Article