பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் பள்ளங்கள் சீரமைத்து புதர்களை அகற்றும் பணி தீவிரம்

4 days ago
ARTICLE AD BOX


பல்லடம்: பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் பள்ளங்கள் சீரமைத்து புதர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்லடம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை உள்ள சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. திருப்பூர், பல்லடம்,கோபி, சத்தியமங்கலம், மைசூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு இதுவே பிரதான சாலையாக இருந்து வருகிறது. தினசரி இச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனிடையே வெங்கிட்டாபுரம் – காமநாயக்கன்பாளையம் வரை உள்ள பகுதியில் சாலையின் மேற்பரப்பு பழுதடைந்தும், சாலை ஓரங்களில் முற்புதர்கள் வளர்ந்தும் இருந்தது.

கடந்த வாரம் சென்னையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நடத்திய ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை பள்ளமில்லாத சாலைகளாக பராமரிக்கவும், சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள முட்புதர்களை முழுமையாக அகற்றவும் அறிவுத்தினார். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி சாலையில் பள்ளங்களை சீரமைத்து சாலையோர புதர்களை அகற்றும் பணியில் பல்லடம் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், இச்சாலையில் அதிக வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதால் தற்போது இச்சாலை இருவழி சாலையாக இருப்பதை நான்கு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் பள்ளங்கள் சீரமைத்து புதர்களை அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article