பணம் கையில் தங்காததற்கு இந்த 8 தவறுகள் தான் காரணமா?

7 hours ago
ARTICLE AD BOX

மாதம் முதல் நாள் சம்பளம் வாங்கிய பின்னர் சில நாட்களிலேயே கையில் வைத்திருந்த பணம் எப்படி செலவானது என்று தெரியாமல் கரைந்து போய்விடும். இவ்வாறு நடப்பதற்கு நாம் தெரியாமல் வீட்டில் செய்யும் சில தவறுகள் தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்யும் போது வெண்ணெய்யை உருக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் மகாலக்ஷ்மி தாயார் நம் வீட்டை விட்டு வெளியேறி விடுவார் என்று ஆன்மீக குறிப்பில் சொல்லப்படுகிறது.

2. உறவினர்கள் வீட்டிற்கு வரும்போதும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, விஷேச நாட்களில் கசப்பான காய்கறியான பாகற்காயை சமைக்கக்கூடாது. இதனால் பகைமை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. இனிமையான நாட்களில் கசப்பான காய்கறிகளை சமைப்பதன் மூலமாக மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்காமல் போகும் என்று சொல்லப்படுகிறது.

3. இறைவனுக்கு செய்யப்படும் நைவேத்தியத்தில் உப்பு போட்டு சமைக்கக்கூடாது. அது லக்ஷ்மி கடாட்சத்தைக் குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 9 பொருட்களை பரிசாக மற்றவர்களுக்கு கொடுத்தால்...? தவிர்ப்பது நல்லது மக்களே!
Money mistakes

4. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கீரையை சமைக்கக்கூடாது. அதுப்போல உப்பு கொட்டி வைத்திருக்கும் ஜாடியிலிருந்து கைகளால் உப்பை எடுத்து பயன்படுத்தக் கூடாது. இது மகாலக்ஷ்மியின் அருளை இழக்கச் செய்யும் காரியங்கள் ஆகும்.

5. நம்முடைய வீட்டின் வாசலில் எண்ணெய் சிந்தக்கூடாது. அதுமட்டுமில்லாமல் லக்ஷ்மியின் அம்சமான உப்பு, ஊறுகாய் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது. மேலும் தண்ணீரை வீண்செலவு செய்யாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால், நம்மிடம் இருக்கும் பணமும் அதுப்போலவே கரைந்துப் போய்விடும்.

6. வீட்டில் உள்ள பூஜையறையில் சிதலமடைந்த சாமி படங்களை வைக்கக்கூடாது. மேலும் வீட்டில் முட்செடிகளை வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
உணவு அருந்துவதற்கு முன் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் காரணம் தெரியுமா?
Money mistakes

7. வீட்டில் ஓடாத கடிகாரங்கள் இருந்தால், அது சரிசெய்து வைக்க வேண்டும் அல்லது புதிது மாற்றிவிட வேண்டும். ஓடாத கடிகாரத்தை பார்த்துக் கொண்டேயிருக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

8. ஆறு மணிக்கு மேல் வீட்டில் தலை சீவுவது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்தால் கட்டாயம் லக்ஷ்மி தேவி அந்த வீட்டில் வாசம் செய்ய மாட்டாள்.

எனவே, இந்த தவறுகள் செய்வதை திருத்திக் கொண்டால் கட்டாயம் செல்வ செழிப்பு பெருகும். இது பலரின் பல ஆண்டுகால நம்பிக்கை!

Read Entire Article