ARTICLE AD BOX
பட்டா இல்லாத நிலங்களை வாங்கும் போது.. இந்த ஒரு தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
சென்னை: அந்த காலத்தில் பத்திப்பதிவு மட்டுமே செய்திருப்பார்கள்.பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள்.. அப்படி பட்டா இல்லாத நிலங்களை வாங்கும் போது, கண்ணை மூடிக்கொண்டு பலரும் சில தவறுகளை செய்கிறார்கள்.. அப்படி அவர்கள் செய்யும் தவறுகள் என்ன..அந்த தவறுகளால் அவர்களுக்கு பட்டா வாங்குவதில் ஏற்படும் சிக்கல் என்ன.. உண்மையில் எந்த மாதிரியான சிக்கல்கள் பட்டா வாங்காத நிலங்களுக்கு ஏற்படும் என்பதை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பழைய நிலம்
அந்த காலத்தில் வாங்கிய வீடுகளுக்கு பலர் பத்திரப்பதிவு செய்ததுடன் விட்டிருப்பார்கள்.. பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள்.. இதேபோல் சில நிலங்களுக்கு ஆரம்ப காலம் முதலே பழைய பட்டா மட்டுமே இருக்கும்.. அதாவது தாத்திற்கு தாத்தா பெயரில் பட்டா இருக்கும்.. பத்திரம் மட்டும் மாற்றி இருப்பார்கள். சில நிலங்களில் கூட்டு பட்டாவே நிலத்தை அனுபவித்து வருகிறார்கள், அவர்களுக்குள் பாகப்பிரிவினை செய்து பத்திரப்பதிவு செய்த போதிலும் பட்டா வாங்கியருக்க மாட்டார்கள்.

நீர் நிலை ஆக்கிரமிப்பு
இதேபோல் அரசு நீர்நிலைகளை பாதி ஆக்கிரமித்தும், பாதி சொந்த இடத்திலும் வீடு கட்டியிருப்பார்கள். ஆனால் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். இதேபோல் சில சாலைகளை அல்லது பாதைகளை பெருவாரியாக ஆக்கிரிமித்து, குறைந்த இடத்திற்கு மட்டும்பத்திரப்பதிவு செய்திருப்பார்கள்..அவர்களுமே பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள்.
பஞ்சமி நிலம்
அதேபோல் பஞ்சமி நிலம், கள்ளர் ஜாதி நிலம் மற்றும் அரசால் மக்களுக்கு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றை சிலர் வாங்கியிருப்பார்கள்.. ஆனால் அவர்களுக்கும் பட்டா கிடைத்திருக்காது. மேற்கண்ட நிலங்களை வாங்குவதற்கு முன்பு மிக கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நிலம் என்றால் அவர்கள் தான் வாங்க முடியம்.. மற்றவர்கள் வாங்குவதற்கு நினைக்கக்கூட வேண்டாம்.
பூர்வீக நிலம்
அதேபோல் நீர்நிலை ஆக்கிரமிப்பு, பாதி கட்டிடம், பாதி புறம்போக்கு நிலம் என்றால் நிச்சயம் யோசிக்க வேண்டும். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சிக்கல் இல்லை என்றால் மட்டுமே வாங்க வேண்டும். அதேபோல் பூர்வீக சொத்து பட்டா வாங்கவே இல்லை என்றால் கண்டிப்பாக சிக்கல் தான். குறிப்பிட்ட நபர்கள் பெயரில் பட்டா இல்லாத எந்த நிலத்தையும் வாங்கவது சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே இந்த தவறுகளை செய்துவிடக்கூடாது..
நில அளவு
அதேபோல் நிலத்தில் எந்த வில்லங்கமும் இருக்காது.. அந்த நிலத்திற்கு பத்திரப்பதிவு செய்திருப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பட்டா வாங்கியருப்பார்கள். குறிப்பிட்ட நிலம் உடையவர் மட்டுமே வாங்காமல் விட்டிருப்பார். இந்த நிலத்திற்கு பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போது. பத்திரப்பதிவில் உள்ள அளவிற்கு பட்டா தர முடியாது என்பார்கள்.. என்னவென்று விசாரிக்க போனால், அந்த நிலத்தின் உண்மையான ஸ்கெட்ச் அளவிற்கும் பத்திப்பதிவில் உள்ள அளவிற்கும் வேறுபாடு இருக்கும்..
சர்வேயர் தவறு
அல்லது சர்வேயர் வேறு கல்லை அளவாக வைத்து பக்கத்தில் உள்ளவரின் நிலத்திற்கு பட்டா அதிகமாக தந்திருப்பார்.. அப்படியான சிக்கல் வந்தால் உங்கள் நிலத்திற்கு பட்டா வாங்க முடியாது.மறுபடியும் பக்கத்தில் உள்ளவர், பட்டாவில் உள்ள அளவு தவறு என்று மாற்றித்தர கேட்க வேண்டும். அவரும் நீங்களும் சேர்ந்துதான் புதிய பட்டாவை வாங்க முடியும். எனவே நில அளவு, நிலத்தின் வகை, நிலத்தின் பயன்பாடு, பட்டா போன்றவற்றில் கவனமாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சிக்கல் வராது. இதுபற்றி சந்தேகங்கள் இருந்தால் உங்கள் பகுதியில் ரியல் ஸ்டேட் தொடர்பான வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசிக்கலாம். அவர்கள் உரிய தீர்வினை வழங்குவார்கள்.