ARTICLE AD BOX

Vidaamuyarchi: லைக்கா தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம்தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். அஜித் வழக்கமான தனது பாணியிலிருந்து விலகி இந்த படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் மனைவி திரிஷாவை வில்லன் குரூப் கடத்திவிட அஜித் என்ன செய்தார் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
ரீமேக் ஆசை: அஜித்துக்கு ஒரு பழக்கம் உண்டு. மற்ற மொழியில் வெளியான ஒரு படத்தின் கதை அவருக்கு பிடித்திருந்தால் அதை ரீமேக் செய்து அதில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவார். தனது படத்தை இயக்கும் இயக்குனரிடம் ‘உங்கள் கதையில் அடுத்த படம் நடிக்கிறேன். இப்போது இந்த கதையை எடுப்போம்’ என்பார்.

ஆசை காட்டும் அஜித்: ‘அட அஜித்தை வைத்து இரண்டு படமா?’ என சந்தோஷப்பட்டு இயக்குனர்களும் அதற்கு சம்மதிப்பார்கள். அமிதாப்பச்சன் நடித்த ‘பின்க்’ திரைப்படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வையாக மாறியது. சிறுத்தை சிவா இயக்கத்தில் விவேகம் படம் உருவானது கூட அப்படித்தான். அந்த கதையில் அஜித்தின் தலையீடு அதிக அளவில் இருந்தது. அதனால்தான் அந்த படம் ஓடவில்லை. அதுபோல இயக்குனர் மகிழ் திருமேனி என முடிவானதும் 1997ம் வருடம் வெளிவந்த பிரேக்டவுன் படத்தின் கதையை தமிழில் எடுப்போம்.. அடுத்த படம் உங்க கதை’ என அஜித் சொல்ல ஓகே சொன்னார் மகிழ்.
பிரேக்டவுன் கதை: ஆனால், பிரேக் டவுன் பட கதையிலிருந்து நிறைய மாற்றினார் மகிழ் திருமேனி. மனைவியை கடத்துகிறார்கள் என்பதை தவிர பிரேக் டவுன் படத்திற்கும் விடாமுயற்சி படத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தது. ஆனாலும், பிரேக்டவுன் படத்தை தயாரித்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் லைக்காவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

விடாமுயற்சி வசூல்: ஒருபக்கம் விடாமுயற்சி படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. இந்த படம் தமிழகத்தில் 100 கோடியை கூட வசூல் செய்யவில்லை. உலகம் முழுவதும் சேர்த்து 140 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இதில், அஜித் சம்பளமே 105 கோடி என்கிறார்கள். மற்றவர்கள் சம்பளம், படத்தின் பட்ஜெட் என எல்லாம் கணக்கிட்டால் லைக்காவுக்கு இப்படம் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை என்றே சொல்கிறார்கள்.
கதைக்கு நஷ்ட ஈடு: இந்நிலையில்தான், பிரேக் டவுன் பட கதையை சுட்டதற்காக 17.5 கோடியை பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை எடுக்க சொன்னது அஜித். அந்த கதையை எடுத்தது மகிழ் திருமேனி. எனவே, அவர்களின் சம்பளத்தில் பிடித்துக்கொண்டார்களா இல்லை லைக்கா நிறுவனமே அந்த பணத்தை கொடுத்துவிட்டதா என்பது தெரியவில்லை. ஏற்கனவே படத்தில் லாபமில்லை என்கிற நிலையில் 17.5 கோடி என்பது லைக்காவுக்கு கூடுதல் சுமையாக அமைந்துவிட்டது.