கிளாமரா நடிக்க ஆரம்பிச்ச பிறகு? என் வீட்ல சொன்னது.. நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த தகவல்

3 hours ago
ARTICLE AD BOX

தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பக்கா தமிழ் பெண்ணான இவருடைய பூர்வீகம் மதுரை . கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். நடிப்பது மட்டுமல்லாமல் ரேஸிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். 2013 ஆம் ஆண்டிலிருந்து இவர் ரேசில் கலந்து கொண்டு வருகிறார்.

அது சம்பந்தமான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது .மற்ற முன்னணி நடிகைகளை போல் நிவேதா பெத்துராஜ் இன்னும் பெரிய அளவில் வரவில்லை என்றாலும் இவரைப் பற்றிய பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வந்து கொண்டே இருந்தன. இவர் அளவுக்கு அதிகமாக செலவு செய்கிறார். துபாயில் பெரிய அளவில் வசதியாக வாழ்ந்து வருகிறார் என்றெல்லாம் பொய்யான செய்திகள் இவரைப் பற்றி வெளிவந்தன.

அதற்கு நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதற்கான விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அது மட்டும் அல்ல தன்னை பற்றி தொடர்ந்து இந்த மாதிரி சர்ச்சைகள் வருவதால் என் பெற்றோர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் இவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நெருக்கம் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்திய ஒரு பேட்டியில் கிளாமரில் நடிப்பது குறித்து பகிர்ந்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் தமிழில் ஹோம்லியான தோற்றத்தில் தான் நடித்திருக்கிறார் .அப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சினிமாவிலேயே நுழைந்து இருக்கிறார் நிவேதா பெத்துராஜ். ஏனெனில் கிளாமராக நடித்து அது தன் குடும்பத்தையும் பெற்றோரையும் நண்பர்களையும் பாதித்து விடக்கூடாது என்றே கிளாமரில் நடிக்காமல் இருந்தாராம்.

ஆனால் தெலுங்கில் அளவாய்குண்டபுரம் அதன் பிறகு தம்கி போன்ற படங்களில் கிளாமராக நடிக்க தொடங்கி விட்டேன் எனக் கூறினார். ஆனால் அதை என் பெற்றோர்கள் புரிந்து கொண்டார்கள் .இப்போது அவர்களுடன் சேர்ந்து நான் என் படங்களை பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதுதான் எனக்கு வேண்டும். என் படங்களை என் பெற்றோருடன் சேர்ந்து பார்க்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

Read Entire Article