ARTICLE AD BOX

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். ஏராளமான படங்களில் நடித்து பல விருதுகளை குவித்த இவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினையும் தொடங்கிய அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரித்திருந்தார். மறைந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை படமாக உருவாகியிருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ” 2019 ஆம் ஆண்டே அமரன் படத்தின் கதையை கமலஹசன் சாரிடம் கூறினேன். அப்போது அவர் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கூட கிடையாது. அமரன் படத்தின் கதையை கேட்ட கமல், எனக்கு 30 வயசு இருந்திருந்தால் நானே அமரன் படத்தில் நடித்திருப்பேன்” என்றார் என்று கூறியுள்ளார்.