பட வாய்ப்பு இல்லை! ஆனாலும் கோடிகளில் சம்பாதிக்கும் படையப்பா நடிகை!

4 days ago
ARTICLE AD BOX

தமிழ்த் திரையுலகில் கதாநாயகர்களை விடவும் கதாநாயகிகளுக்கு சம்பளம் குறைவு தான். இருப்பினும் கதாநாயகிகள் தான் அதிக திரைப்படங்களில் நடிப்பதுண்டு. அவ்வகையில் சினிமா துறையில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். வயதான பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக பாகுபலி படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்தது. தற்போது இவர் பட வாய்ப்பே இல்லாமல் கோடிகளில் சம்பாதிக்கிறார்!

ஒரு நடிகை உச்சத்தில் இருக்கும் போது, பட வாய்ப்புகள் குவியும். அதுவே ஒருசில படங்கள் தோல்வியை சந்தித்தால், பட வாய்ப்புகள் குறைவதோடு சம்பளமும் குறையும். அதேபோல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நடிகைகள் பெரும்பாலும் படங்களில் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடிப்பார்கள். அவ்வகையில் பல வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் ரம்யா கிருஷ்ணன்.

கதாநாயகி மற்றும் வில்லி என இவர் பல வேடங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டியிருப்பார் ரம்யா கிருஷ்ணன். பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

14 வயதிலேயே திரைத்துறைக்குள் நுழைந்த ரம்யா கிருஷ்ணன், முதலில் நடித்தது மலையாள படத்தில் தான். 1985 இல் வெள்ளை மனசு என்ற தமிழ்ப் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இப்படம் வெளியாகும் போது ரம்யா கிருஷ்ணன் 8 ஆம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார். கேப்டன் பிரபாகரன், படையப்பா, அம்மன், பஞ்சதந்திரம், பட்ஜெட் பத்மநாபன் மற்றும் ஜூலி கணபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத சூழலில் கூட மாதந்தோறும் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். ஹைதராபாத்தில் மட்டும் இவருக்குச் சொந்தமாக 3 நகைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இவருக்கு கேரளாவில் 5 அழகு நிலையங்களும் உள்ளன. இதிலிருந்து மாதந்தோறும் ரம்யா கிருஷ்ணனுக்கு நல்ல வருமானம் வருகிறது.

இதையும் படியுங்கள்:
தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கிங்' யார்?
Tamil Cinema Actress

ஒரு காலத்தில் நல்ல நிலையில் இருந்த நடிகைகள் பலரும் இன்று மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், ரம்யா கிருஷ்ணன் சிறப்பான முறையில் முதலீடு செய்து, தற்போது நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார். இவரது இந்த வருமானம் சில முன்னணி நடிகர்களின் சம்பளத்தை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தெலுங்கில் குண்டூர் காரம், தமிழில் ஜெயிலர் போன்ற படங்களில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் இவர் தங்கம் மற்றும் வம்சம் உள்பட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

Read Entire Article