ARTICLE AD BOX
கடந்த இரண்டு எபிசோடுகளில் நடந்தவற்றை முதலில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

விஜயாவின் நடனப் பள்ளியில் இருக்கும் இளம் காதல் ஜோடிகள் விஜயாவுக்கு ஐஸ் வைப்பதற்காக ஒரு வெயிட் மெஷினை வாங்கி வருகின்றனர். அந்த எடை பார்க்கும் மெஷினில் அனைவரும் தங்கள் எடையை ஆர்வத்தோடு பார்க்கின்றனர்.
சிந்தாமணி, பார்வதி ஆகியோர் எடை பார்க்கின்றனர். ஆனால் விஜயா எடையைப் பார்க்கும்போது அந்த மெஷின் செயலிழக்கிறது. விஜயாவின் எடையைத் தாங்க முடியாமல் அது பழுதாகிவிட்டதாக பார்வதி கலாய்க்கிறார். விஜயா இதனால் எடையைக் குறைக்கவேண்டும் என முடிவெடுக்கிறார்.
வீட்டில் மீனா இட்லியும் வடகறியும் செய்து வைத்திருப்பதை பார்த்து விஜயா கடிந்து கொள்கிறார். இனி டயட் உணவு மட்டுமே சாப்பிடப் போவதாகக் கூறி சமையலறைக்குச் சென்று இட்லியை வைத்து யாருக்கும் தெரியாமல் சாப்பிடுகிறார். ஆனால் மனோஜ் பார்த்துவிடுகிறார்.

வடகறியின் வாசம் தன் டயட்டைக் கெடுத்துவிட்டதாக மனசாட்சியே இல்லாமல் மீனாவை குறைகூறுகிறார் விஜயா. மனோஜ் விஜயாவுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். தன் ஷோரூமுக்கு வரும் உணவுமுறை நிபுணரிடம் கேட்டு என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதைத் தெரிந்துகொண்டு டயட் இருக்கலாம் எனச் சொல்கிறார் மனோஜ்.
நேற்று வெளியான புரோமோவில் மனோஜ் சொன்ன உணவு நிபுணர் விஜயாவை சந்தித்து சில உணவு முறைகளை பரிந்துரைக்கிறார். விஜயாவுடன் சேர்ந்து மனோஜும் அந்த உணவுமுறையை பின்பற்றுகிறார். ஆனால் இருவருக்கும் அந்த உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிறு கோளாறு வந்துவிடுகிறது. அதோடு புரோமோ முடிகிறது.

இதனிடையே க்ருஷின் பள்ளியில் நடக்கும் ஆசிரியர்- பெற்றோர் மீட்டிங்கில் கலந்து கொள்ளமுடியாமல் ரோகிணி தவிக்கிறார். அண்ணாமலையும் பள்ளிக்குச் செல்வதால் மீட்டிங்கிற்குப் போனால் மாட்டிக் கொள்வோம் என வீடியோ காலில் வருவதாக ஆசிரியர்களிடம் சொல்கிறார். அண்ணாமலையை பள்ளியில் டிராப் செய்ய முத்து, மீனா வருகின்றனர். அந்த சமயத்தில் க்ருஷின் பாட்டி பள்ளிக்கு வருவதைப் பார்த்து அன்போடு பேசச் செல்கின்றனர். ஆனால் அவர் முகம் கொடுத்துப் பேசாமல் பதற்றத்துடன் அங்கிருந்து செல்கிறார்.
ரோகிணி தன் தோழி வித்யா உதவியுடன் அவர் வீட்டில் இருந்து மாஸ்க் போட்டுக் கொண்டு வீடியோ கால் மூலமாக பேரண்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார். ஆனால் அண்ணாமலைக்கு இந்தக் காட்சி குழப்பத்தை ஏற்படுத்துகிறது. கடந்த எபிசோட் இறுதியில் வெளியான புரோமோவில் க்ருஷின் அம்மா, அப்பா யாராக இருக்கும் என்ற துப்பறியும் வேலையில் மீனா களமிறங்குகிறார்.

மீனாவுக்கு ஒன்று மட்டும் புரிகிறது. க்ருஷின் பாட்டி பயந்து ஒதுங்கிச் செல்வதை பார்க்கும்போது க்ருஷின் பெற்றோர் நம் குடும்பத்தோடு தொடர்புள்ள யாரோ ஒருவர் தான் என்பதை மீனா கண்டுபிடித்துவிட்டார். ஆனால் தவறாக மனோஜ் மீது அவர் சந்தேகம் திசைதிரும்பிவிட்டது. க்ருஷ் மனோஜிற்கும் ஜீவாவிற்கும் பிறந்த மகன் என மீனா முடிவுக்கு வருகிறார். சமீபத்தில் வெளியான புரோமோக்களில் இது சிறந்த புரோமோ எனலாம். கதைக்களம் நகைச்சுவையாக நகர்வது சீரியலுக்கு பலம் சேர்க்கிறது.
முத்துவின் மொபைல் தொலைந்தது, பரசுவின் மகள் திருமணத்தில் கறிக்கடை மணி கலந்து கொள்வது, சீதா-அருணின் நட்பு என இன்னும் அடுத்தடுத்து பல திருப்பங்கள் காத்திருக்கின்றன.
Siragadikka aasai : ரோகிணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகள்! - சிறகடிக்க ஆசை அப்டேட்
வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel