ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்த இடைக்கால தடை..!! – உயர் நீதிமன்ற மதுரை கிளை

2 hours ago
ARTICLE AD BOX

பேச்சு வார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த கூடாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைக்கு செவிசாய்க்காத நிலையில், இதனைக் கண்டித்து ஜாக்டோ – ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜியோ ஜாக்டோ தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்ரவரி 25 அன்று நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் அரசு ஊழியர்கள் இவ்வாறு ஸ்டிரைக் நடத்துவது சட்ட விரோதம் என்று தடை செய்து உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் சட்ட விரோதமானது.

பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ நடத்த உள்ள ஸ்டிரைக் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். ஸ்டிரைக் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மீது கிரிமினல் சட்டங்கள் கீழ் வழக்கு பதிவு செய்யவும், அவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்யவும், உரிய விசாரணை நடத்தி நிரந்தர பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேச்சு வார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த கூடாது. 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக அரசு சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தர்விட்டுள்ளது.

Read more : கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவமா….? ராமதாஸ் கேள்வி

The post ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்த இடைக்கால தடை..!! – உயர் நீதிமன்ற மதுரை கிளை appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article