பாகிஸ்தான் கிரிக்கெட்: திறமையற்ற வீரர்களும், தவறான நிர்வாகமும் – முன்னாள் வீரர்கள்!

3 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து வசீம் அக்ரம் மற்றும் சோயித் அக்தர் ஆகியோர் கடுமையாக பேசியிருக்கிறார்கள்.

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் ஆரம்பமானது. அனைத்து அணிகளின் போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன.

இந்த தொடரில் பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் ஒரு போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். இவர்கள் இருவரும் மோதும் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுப் போய்விட்டது.

 நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் குஷியில் இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் தனது சொந்த வீரர்களையே சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியும் தோல்வியில்  முடிந்தது. இதனால், முதல் அணியாக பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறுகிறது.

இதையும் படியுங்கள்:
ஓய்வு நேரங்களை மதியுங்கள்... வெற்றி நிச்சயம்!
Pakistan Cricketer

இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சோயிப் அக்தர் எமோஷனலாக வெளியிட்டுள்ள வீடியோவில், “பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவும் கிடையாது, என்ன செய்ய வேண்டும் எனவும் தெரியவில்லை. முன்னணி அணிகள் 6 பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருக்கும் போது இவர்கள் 5 பேரையே வைத்திருக்கிறார்கள். 2 ஆல் ரவுண்டர்களை வைத்திருக்கின்றனர். இது அறிவில்லாத செயல், என்ன செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகத்துக்கு தெரியவில்லை. மிகவும் அதிருப்தியாக இருக்கிறது.”

இதையும் படியுங்கள்:
வேட்டையாடும் சமூகம்: பெண் குழந்தைகளை குறிவைக்கும் காம கொடூரர்கள்...
Pakistan Cricketer

மேலும் வசீம் அக்ரம் பேசுகையில், ‘பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியை முற்றிலும் மாற்றியாக வேண்டும். துடிப்பான இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வாருங்கள். எந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் அத்தனையையும் செய்து விடுங்கள். 6 மாதமாக தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள், அது பரவாயில்லை. 2026 உலக டி20 கிரிக்கெட் தொடருக்கான பணியை இப்போதே தொடங்குங்கள். பாகிஸ்தான் பந்துவீச தொடங்கிய 15வது ஓவரில் இருந்து மைதானத்தில் இருந்து பாக் ரசிகர்கள் வெளியேற தொடங்கினர். என் வாழ்நாளில் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. மிக மோசமான நிகழ்வு இது.” இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article