"நோன்பு கூட வைக்கல.. ஷமி ஒரு கிரிமினல்.." வெடித்த புதிய சர்ச்சை! என்ன நடக்கிறது?

2 hours ago
ARTICLE AD BOX

"நோன்பு கூட வைக்கல.. ஷமி ஒரு கிரிமினல்.." வெடித்த புதிய சர்ச்சை! என்ன நடக்கிறது?

Cricket
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷமி எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்த வீடியோவை பகிர்ந்து, அவர் நோன்பு கடைப்பிடிக்கவில்லை என்றும் இதன் மூலம் அவர் குற்றம் செய்துவிட்டார் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் மௌலானா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் இப்போது துபாயில் நடந்து வருகிறது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

Champions Trophy 2025 cricket Mohammed Shami 2025

முகமது ஷமி

இந்த போட்டியில் 10 ஓவ்களில் 48 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்திய ஷமி இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியின்போது அவர் எனர்ஜி டிரிங் குடித்த வீடியோவை வைத்து, சிலர் சர்ச்சையாக்கி வருகிறார்கள். இதற்காக அவரை கிரிமினல் என்றும் கூட விமர்சித்து வருகிறார்கள். ஷமியை ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அதாவது இப்போது ரமலான் மாதம் நடக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு இருக்க வேண்டும். அதிகாலை முதல் சூரிஸ் அஸ்தமனம் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. ஆனால், நோன்பு வைக்காமல் ஷமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியின் போது எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தார் என்பதே விமர்சனமாகும். இதற்காக அவரே கிரிமினல் என்றும் கூட அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி சாடியுள்ளார்.

ஷமி ஒரு கிரிமினல்

இது தொடர்பாகப் பேசிய மௌலானா பரேல்வி, "நோன்பு கடைப்பிடிக்காமல் இருப்பதன் மூலம் அவர் (முகமது ஷமி) ஒரு குற்றம் செய்துவிட்டார். அவர் இப்படிச் செய்யக்கூடாது. ஷரியத்தின் பார்வையில், அவர் ஒரு குற்றவாளி. அவர் கடவுளுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.. நோன்பு இருப்பது கட்டாயக் கடமைகளில் ஒன்று. அதைக் கடைப்பிடிக்காத யாராக இருந்தாலும் கிரிமனல் தான்.

ஆரோக்கியமாக இருக்கும் அனைத்து ஆண்களும் பெண்களும் நோன்பு இருக்க வேண்டும். அப்படி இருக்கவில்லை என்றால் அது குற்றம் தான். அதை இதை கடைப்பிடிக்காமல் கிரிக்கெட் போட்டியின் போது ஷமி தண்ணீர் மற்றும் எனர்ஜி ட்ரிங்ஸ் குறிப்பிட்டு இருக்கிறார்" என்று ஆவேசமாகப் பேசினார். இருப்பினும், மௌலானா பரேல்வியின் கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளே பதிலடி கொடுத்துள்ளது. மலிவான விளம்பரத்திற்காகவே அவர் இப்படிப் பேசியுள்ளதாக ஷியா மதகுரு மௌலானா யசூப் அப்பாஸ் கூறியுள்ளார்.

ஷமிக்கு ஆதரவு

அவர் மேலும் கூறுகையில், "மௌலானாவின் கருத்துகள் நல்லது இல்லை.. அவர் மலிவான விளம்பரத்திற்காக இதுபோல முகமது ஷமி குறித்து இப்படிப் பேசியிருக்கிறார். எந்தவொரு விஷயமும் கட்டாயம் என்றால் அங்கு மதம் இருக்காது. மதம் இருக்கும் எந்தவொரு விஷயமும் கட்டாயமாக இருக்காது. அனைத்து முஸ்லீம்களும் நோன்பு இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.

சாம்பியன்ஸ் டிராபி.. வம்பிழுக்கும் ஆஸ்திரேலிய வீரர்! இந்தியாவுக்கு சாதகமாம்! கம்மின்ஸ் கொந்தளிப்பு
சாம்பியன்ஸ் டிராபி.. வம்பிழுக்கும் ஆஸ்திரேலிய வீரர்! இந்தியாவுக்கு சாதகமாம்! கம்மின்ஸ் கொந்தளிப்பு

ஒருவர் நோன்பு இருக்கத் தவறினால், அது அவரது தனிப்பட்ட தோல்வி. அதற்கு மதத்துடன் எந்த தொடர்பும் இல்லை. ரமலான் மாதத்தில் நோன்பைப் பின்பற்றாமல் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி எல்லாம் மௌலானா எதுவும் சொல்லவில்லை? நோன்பு மற்றும் ரமலான் குறித்து இதுபோல சர்ச்சையைக் கிளப்புவது தவறு" என்றார்.

இது ட்விஸ்ட்

அதேபோல அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் மௌலானா காலித் ரஷீத் ஃபரங்கி மஹ்லி கூறுகையில், "ரமலான் சமயத்தில் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு இருக்க வேண்டிய கட்டாயம் என்றாலும் ஒருவர் வெளியூருக்குப் பயணம் சென்று இருந்தாலோ அல்லது உடல்நலக்குறைவாகப் பாதிக்கப்பட்டு இருந்தாலோ நோன்பு கட்டாயம் இல்லை. அது அவர்கள் விருப்பம். முகமது ஷமியைப் பொறுத்தவரை, அவர் ஒரு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். எனவே நோன்பை கடைப்பிடிக்காமல் இருப்பது அவரது விருப்பம்.. அவரை குறை சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை" என்றார்.

More From
Prev
Next
English summary
Indian cricketer Mohammed Shami faced intense trolling for not following Roza, with some even calling him a criminal (சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலக்கிய ஷமி): Mohammed Shami performance in Champions Trophy.
Read Entire Article