ARTICLE AD BOX
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 7 - 2025 வெள்ளிக்கிழமை

அஸ்வினி: மக்கர் பண்ணும் வியாபாரத்தில் சிக்கலைத் தீர்ப்பீர்கள்.
பரணி: காலைச் சுற்றிய கஷ்டங்களைக் கழற்றி எறிவீர்கள்.
கார்த்திகை: கை நிறைய காசு,பை நிறைய பணம் என்ற நிலை.
ரோகிணி: வீட்டுக் கடனைத் தீர்க்க பாடுபடுவீர்கள்.
மிருகசீரிடம்: வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்வீர்கள்.
திருவாதிரை: உங்கள் பெயரைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள்.
புனர்பூசம்: கலகலப்பாகப் பேசி காரியத்தைச் சாதிப்பீர்கள்.
பூசம்: தள்ளிப்போன காரியத்தைத் தடையில்லாமல் நடத்துவீர்கள்.
ஆயில்யம்: ஊர்சுற்றும் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள்.
மகம்: வீட்டில் மராமத்து வேலை பார்ப்பீர்கள்.
பூரம்: முகம் சுளித்துச் சென்ற சகோதரன் அகம் மலர திரும்பி வருவான்.
உத்திரம்: உங்களை வீழ்த்த நினைத்த எதிரிகள் வீழ்ந்து போவார்கள்.
அஸ்தம்: வேலைக்கான புதிய திட்டங்கள் மனதில் உதயமாகும்.
சித்திரை: பெண்களின் பிடிவாதம் உங்களுக்கு செலவு வைக்கும்.
சுவாதி: அரசாங்க காரியத்திற்கு அலைந்து திரிவீர்கள்.
விசாகம்: உறவினரின் துன்பத்தில் பங்கு கொள்வீர்கள்.
அனுஷம்: பணியிடத்தில் நிதானமாக நடந்து கொள்வீர்கள்.
கேட்டை: பாதை மாறிய நண்பனைப் பக்குவமாகத் திருத்துவீர்கள்.
மூலம்: நெருக்கடிகளைச் சமாளிக்க அதிரடியாக இறங்குவீர்கள்.
பூராடம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி பெருமைப்படுவீர்கள்.
உத்திராடம்: உறவினர்களின் அலட்சியப் போக்கை உதாசீனப்படுத்துவீர்கள்.
திருவோணம்: தொழிலை மேம்படுத்த கூடுதல் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம்: பணியிடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சதயம்: பணி உயர்வுக்கான படிப்பைத் தொடங்க ஆர்வம் கொள்வீர்கள்.
பூரட்டாதி: நாளைக்குப் பார்ப்போம் என்று வேலையை ஒத்தி வைக்காதீர்கள்.
உத்திரட்டாதி: தேடி வரும் நல்ல வாய்ப்புகளைத் தவற விடாதீர்கள்.
ரேவதி: எதிர்பார்த்த அரசாங்க வேலை இடையூறின்றி நடக்கும்.