தமிழகத்தில் ரூ.4.25 கோடி செலவில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள்: வனத்துறை செயலாளர் அறிவிப்பு

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2022-23ம் ஆண்டு, சட்டமன்றத்தில் தமிழகத்தில் 100 மரகதப் பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்) உருவாக்கப்படும் என்று அறிவிப்பாக வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், உள்ளூர் மக்கள் அன்றாட தேவைகளான தடிமரம், விறகு மரம், கால்நடை தீவனம் ஆகிய தேவைகளுக்காக வனங்களை சார்ந்து இருப்பதை குறைத்தல் ஆகும்.

அதன்படி சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ.25 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.மாநில அரசினால் ஏற்கனவே 83 மரகதப்பூஞ்சோலைகள் அமைக்க இரண்டு கட்டமாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 75 மரகதப்பூஞ்சோலைகள் 29 மாவட்டங்களில் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவுபெற்று 14.08.2024 தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

மேலும் 8 மரகதப்பூஞ்சோலைகளிலும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது, மேலும் 17 மரகதப்பூஞ்சோலைகள் 5 மாவட்டங்களில் மொத்தம் ரூ.4.25 கோடி செலவில் மேற்கொள்ள மாநில அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த மரகதப்பூஞ்சோலைகள் திண்டுக்கல் (5), பெரம்பலூர் (4), கள்ளக்குறிச்சி (3), திருப்பத்தூர் (3) மற்றும் திருவண்ணாமலை (2) ஆகிய மாவட்டங்களில் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 100 மரகதப்பூஞ்சோலைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் ரூ.4.25 கோடி செலவில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள்: வனத்துறை செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article