இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 7 - 2025 வெள்ளிக்கிழமை

3 hours ago
ARTICLE AD BOX

இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 7 - 2025 வெள்ளிக்கிழமை

Astrology
lekhaka-Bernadsha A
Subscribe to Oneindia Tamil

சென்னை

குரோதி வருடம் மாசி மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 07.03.2025

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 02.03 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று அதிகாலை 04.37 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.

சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

வியாபாரத்தை வெகு நிதானமாக நடத்துவீர்கள். கடன்களை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷனாகக் காணப்படுவீர்கள். தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வேலை இடங்களில் இடையூறுகளை நீக்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகம் பார்க்கும் இடத்தில் உள் குத்து வேலையால் உள்ளம் சோர்வடைவீர்கள். பணி நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களில் அலைவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு பிள்ளைகளின் உறுதுணையை பெறுவீர்கள். அரசியல் துறையில் ஏற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பத்தில் அமைதியை கொண்டு வருவீர்கள். .
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்

மிதுனம்

வேலையிடத்தில் உயரதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். வாகனங்களில் செல்லும்போது சாலையில் கவனத்தை சிதற விடாதீர்கள். பயணங்களின்போது பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொல்ல மறக்காதீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட தவறாதீர்கள். காதலியின் கோபத்தை குறைக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்

கடகம்

திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். அதன் மூலம் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்களில் நன்மையை அடைவீர்கள். உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற வருமானம் பெறுவீர்கள். திடீர் பிரச்சனைகள் உண்டாகி மனச்சங்கடம் கொள்வீர்கள். தொழிலுக்கு இருந்த எதிர்ப்புகளை விலக்கி ஏற்றம் பெறுவீர்கள். பணவரவு அதிகமாகி பொருளாதாரம் முன்னேற்றம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்

சிம்மம்

நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். துணிச்சலான முயற்சிகளால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். அதிகாரியின் உதவியால் வேலை மாறுதல் பெறுவீர்கள். பெற்றோர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி

கன்னி

எதிரிகள் உங்கள் வியாபாரத்தைக் கெடுக்க நினைப்பதை உணர்வீர்கள். எச்சரிக்கையாக நடந்து அதை தடுப்பீர்கள். எடுத்த காரியத்தில் ஏதாவது ஒரு இடையூறை சந்திப்பீர்கள். மரியாதை குறைவான பேச்சால் மனைவியோடு சண்டை போடுவீர்கள். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்வீர்கள். கடன் சுமையால் கவலைப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தை அதிகரிப்பீர்கள். அதனால் அவசரப்பட்டு விரயத்தை சந்திப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத வகையில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் மந்தமான நிலையை காண்பீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளாவிடில் நஷ்டம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்

விருச்சிகம்

நண்பர்கள் உறவினர்கள் உதவியால் வீட்டை புதுப்பிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரித்து சந்தோஷப்படுவீர்கள். தொழில் துறையில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். வேலைப்பளுவையும் அலைச்சலையும் குறைப்பீர்கள். அரசாங்கத்தில் புதிய ஆர்டர்களைப் பெறுவதற்கான தடைகளை நீக்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு

தனுசு

உறவுகளில் இருந்த சிக்கலை பேசி தீர்ப்பீர்கள். குறுக்கே வரும் சிறு சிறு இடையூறுகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வான பலனை அடைவீர்கள். கணவன் மனைவிக்கு இடையில் தோன்றிய ஊடல் நீங்கி நெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் சாப்பிட நேரம் இல்லாமல் அலைவீர்கள். தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்

மகரம்

பணியாளர்கள் அலுவல் சுமையால் மிகுந்த அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் செய்யும் குழப்பத்தால் கோபம் அடைவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். வியாபாரப் பயணங்களில் தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். திட்டமிட்டபடி சிறப்பாக தொழிலை மேம்படுத்துவீர்கள். நாணயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் அவமானம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்

கும்பம்

ரியல் எஸ்டேட் தொழிலில் முழு கவனம் செலுத்துவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் பெறுவீர்கள். வீடுகட்ட நிலம் வாங்குவீர்கள். உற்ற நண்பர்கள் உதவியை பெறுவீர்கள் திறமையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வெற்றி நடை போடுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்ற கடினமாக உழைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்

மீனம்

தொழில் துறையில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த பிரச்சனைகளை பேசி தீர்ப்பீர்கள். பொறுப்போடு சகோதரியின் திருமண ஏற்பாட்டை செய்வீர்கள். பிள்ளைகளால் பெருமிதம் கொள்வீர்கள். துணிச்சலாக காரியம் முடிப்பீர்கள். வேலைக்காக வேறு இடம் செல்வீர்கள். பேச்சுத் திறமையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5

உங்கள் ஜோதிடர், கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி.
தொலைபேசி எண்: 9942987859

More From
Prev
Next
English summary
Today's Rasi Palan march 07, friday 2025,Get your Daily Horoscope in tamil based on your zodiac signs
Read Entire Article