நேட்டோவில் உக்ரைன் சேராவிட்டால், உக்ரைனுக்குள் நேட்டோவை உருவாக்குவோம்: ஜெலென்ஸ்கி!!

2 hours ago
ARTICLE AD BOX

கீவ்: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரின் ரியாத் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதர்கள் அடுத்த வாரம் சந்திக்க வாய்ப்புள்ளது என்று ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேட்டோவில் இணையுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். நேட்டோவில் உக்ரைன்  சேராவிட்டால், உக்ரைனுக்குள் நேட்டோவை உருவாக்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். நேட்டோ கூட்டணியில் இணைந்தால் உக்ரைன் அதிபர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என்று அவர் கூறியிருந்தார்.

"மற்றொரு போர் வராமல் தடுக்க நேட்டோதான் சிறந்த வழி. இது மிகவும் எளிமையான மற்றும் தர்க்கரீதியான தீர்வு. நேட்டோவில் உக்ரைன் சேராவிட்டால், உக்ரைனுக்குள் நேட்டோவை உருவாக்க வேண்டும். அதாவது ஆக்கிரமிப்பை முறியடிக்க போதுமான ராணுவத்தை பராமரிக்க வேண்டும். அதற்கு நிதியளிக்க வேண்டும். சொந்த ஆயுதங்களை உற்பத்தி செய்து சேமிக்க வேண்டும்.

''மேலும் ரஷ்யா மற்றொரு போரைத் தொடங்காமல் தடுக்க எங்கள் பகூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதனால்தான் நாங்கள் ஒரு விரிவான பாதுகாப்பு உத்தரவாத அமைப்பு பற்றி பேசுகிறோம். ராணுவம், பொருளாதாரம் மற்றும் அரசியல்,  எது மலிவானது, எது மிகவும் யதார்த்தமானது, எது வேகமாக செய்ய முடியும் என்பதை நாம் எடைபோட வேண்டும். உண்மையான பாதுகாப்பை நோக்கி நாங்கள் செய்யும் பணிக்கு உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணிந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி?

மேலும் அவர் மற்றொரு பதிவில், "உக்ரைனுக்கும், சுதந்திர உலகிற்கும் உண்மையான பாதுகாப்பு உத்தரவாத அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நல்ல பொருளாதார ஒப்பந்தத்தை நாங்கள் விரும்புகிறோம். எங்கள் குழுக்கள் ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றன. நாங்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறோம். உக்ரைன் ஒரு வலுவான ஒப்பந்தத்தை விரும்புகிறது. அது பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அமெரிக்காவுடனான எங்கள் பொருளாதார கூட்டாண்மைக்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைக்கும். நியாயமான விதிமுறைகள் வலுவான முடிவுகளை உருவாக்குகின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

ரியாத் சந்திப்பிற்குப் பிறகு ஜெலென்ஸ்கியும், ட்ரம்பும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் முத்திரை குத்தியதுடன், உக்ரைன் தான் போரைத் தொடங்கியது என்றும் கூறி இருந்தார்.

'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!

Read Entire Article