நீண்ட பரபரப்புக்கு மத்தியில் தேர்வு... டெல்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா!

6 days ago
ARTICLE AD BOX
Published on: 
20 Feb 2025, 3:53 am

10 நாட்கள் இழுபறிக்குப் பிறகு டெல்லி முதலமைச்சரை பாஜக தேர்வு செய்துள்ளது. டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா இன்று நண்பகலில் பதவியேற்க உள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், 48 இடங்களை கைப்பற்றிய பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. கடந்த 17 ஆம் தேதி பாஜக எம் எல் ஏக்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. கட்சியின் மாநில தலைவரான வீரேந்த்திர சச்தேவா டெல்லி முதல்வர் தேர்வு தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

டெல்லி முதல்வர் பட்டியலில், அரவிந்த் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சர்மா பெயரும், ரேகா குப்தா, முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜ் எம்.பி. ஆகியோரது பெயரும் இடம்பெற்று இருந்தது.

மேலும், நேற்று இரவு பாஜக எம் எல் ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவின் 48 எம் எல் ஏக்களும் கலந்துகொண்டனர். தொடந்து இந்த கூட்டத்தில், முதல் முறையாக எம் எல் ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா என்ற பெண் எம்எல்ஏ டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று நண்பகலில் டெல்லியின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேகா குப்தா.டெல்லியில் 4ஆவது பெண் முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ரேகா குப்தாவுடன் இணைந்து துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா மற்றும் 5 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ரேகா குப்தா, ” டெல்லி மக்களுக்கு 27 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வாழ்க்கை பிறக்கப்போகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எனது லட்சியம்.” என்று குறிப்பிட்டார்.

ரேகா குப்தா
Headlines | டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு முதல் உக்ரைன் அதிபரை விமர்சித்த ட்ரம்ப் வரை!

முன்னதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க ரேகா குப்தா உரிமைக் கோரினார். இதனிடையே, டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தாவிற்கு அர்விந்த் கெஜ்ரிவால், அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read Entire Article