'நிறம் மாறும் உலகில்' படத்தின் டிரெய்லர் வெளியானது

6 days ago
ARTICLE AD BOX

சென்னை,

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. நான்கு விதமான வாழ்க்கை, நான்கு விதமான கதை அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை பற்றி பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றன. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

The trailer of intense family drama ♥️ is here. Prepare for an emotional journey congratulations team #NiramMarumUlagil Trailer Out Now !! https://t.co/gljao5s344 #NiramMarumUlagilFromMarch7Starring ⭐ @iamsandy_off @rio.raj #NatarajanSubramaniampic.twitter.com/ogWN6i9BZ0

— pa.ranjith (@beemji) February 19, 2025


Read Entire Article